தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாத்தில் அபிமன்யு ஈஸ்வரன் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ருதுராஜ் கைக்வாட்டின் வலது கை மோதிர விரலில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டார்.
தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பும் விராட் கோலி
ருதுராஜ் கைக்வாட் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அபிமன்யு ஈஸ்வரன் இதுவரையில் இந்திய அணிக்காக விளையாடியதில்லை என்பதுடன், முதன்முறையாக தென்னாபிரிக்க தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் 88 முதற்தர போட்டிகளில் விளையாடி 22 சதம் மற்றும் 26 சதங்கள் அடங்கலாக 6557 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
சுற்றுலா இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26ம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<