பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு உறுப்பினராக செயற்பட வேண்டும் என முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் அப்துர் ரசாக்கிற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மின்ஹாஜுல் அபிதீன் மற்றும் ஹபிபுல் பஸார் ஆகியோர் உள்ளதுடன், பாருக் அஹமட்டின் இடத்துக்கு அப்துர் ரசாக் இணைந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிராக போராட இலங்கை கிரிக்கெட் சபை நிதி உதவி
இலங்கையின் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியிருக்கும் …
அப்துர் ரசாக்கிற்கு இந்த பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளமையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது. “கிரிக்கெட் சபை தேர்வுக்குழு உறுப்பினர் ஹபிபுல் பஸாரிடம், அப்துர் ரசாகிற்கான இந்த அழைப்பு குறித்து அறிவித்துள்ளேன். அவர் தற்போது டி.பி.எல். (DPL) தொடரில் விளையாடி வருகின்றார். இந்தநிலையில், அவர் எவ்வாறான முடிவினை எடுப்பார் என தெரியவில்லை” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவர் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்துள்ள இந்த அழைப்பினை அப்துர் ரசாக் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், டி.பி.எல். தொடரில் விளையாடி வருவதால் இதற்கான பதிலை அவர் கிரிக்கெட் சபையிடம் அறிவிக்கவில்லை. டி.பி.எல். தொடருக்கான கழகத்தில் விளையாடி வருகின்ற போதும் குறித்த தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால், இனிவரும் சில தினங்களில் இதற்கான அறிவித்தலை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய ரொனால்டினோவுக்கு சக வீரர்கள் வாழ்த்து
பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ பரகுவே சிறையில் தனது 40 …
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அப்துர் ரஷாக், “ஆம் எனக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளது. ஆனால், நான் இதுதொடர்பிலான முடிவினை எடுக்கவில்லை. எனக்கு காலம் தேவைப்படுகிறது. டி.பி.எல். தொடரின் பின்னர் சிந்தித்து முடிவினை எடுக்கலாம் என நினைத்திருந்தேன். எனினும், இப்போது தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது இந்த விடயம் குறித்து சிந்திக்கலாம் என நினைக்கிறேன்”
அதேநேரம், இந்த பதவியினை நான் ஏற்றுக்கொண்டால், எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. அதனால், இதுகுறித்து நன்கு சிந்தித்து, முடிவினை எதிர்காலத்தில் வெளியிடுவேன்” என்றார்.
அப்துர் ரசாக் உள்ளூர் போட்டிகளை பொருத்தவரையில், இதுவரை சிறப்பாக விளையாடி வரும் வீரராக உள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இந்த பதவிக்காக முன்னாள் இடதுகை துடுப்பாட்ட வீரர் சஹீர் நபீஷ் மற்றும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் மஞ்சுருல் இஸ்லாம் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்ய சிந்தித்து வருகின்றது. எனினும், அவர்களிடம் இதுவரையில், எந்த தொடர்பாடல்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…