தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து இவ்வருடம் ஓய்வுபெற்ற முன்னணி கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ், ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதன்முறையாக ஆரம்பிக்கவுள்ள UAE T20x தொடரின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற…
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற வில்லியர்ஸ் தென்னாபிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் தொடர்கள் மற்றும் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் என்பவற்றில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். எனினும், இந்த UAE T20x தொடரில் விளையாட மாட்டார் என்பதை உறுதிசெய்துள்ள இவர், விளம்பர தூதுவராக செயற்படுவார் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் குறிப்பிட்ட வில்லியர்ஸ்,
“ஏனைய தொடர்களை விட UAE T20x தொடர் மீது எனது அவதானம் திரும்புவதற்கு முக்கிய காரணம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இந்த தொடர் அமையவுள்ளமைதான். இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பை இளம் வீரர்களுக்கு பெற்றுக்கொடுப்பேன்.
நான் ஐ.பி.எல். தொடரில் 10 அல்லது 11 வருடங்களுக்கு முன் அறிமுகமாகினேன். இதில் என்னுடைய மறக்கமுடியாத அனுபவம் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஷேன் வோர்ன் மற்றும் கிளேன் மெக்ராத் ஆகியோருடன் விளையாடிய தருணங்கள். அதற்கு முன்னர் எனக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில்லை.
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) தொடருக்கு ஐசிசி அங்கீகாரம்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்த திட்டமிட்டிருந்த….
அத்துடன் இந்த UAE T20x தொடரின் எதிர்கால வளர்ச்சியானது ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபைக்கு புதிய வருமானத்தை ஈட்டித் தரும் என நம்புகிறேன். இதன்மூலம் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்லமுடியும். இதன்மூலம், இங்குள்ள கிரிக்கெட் வீரர்களை அடிப்படையில் இருந்து உயர்த்த முடியும் எனவும் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பிக்கவுள்ள UAE T20x தொடரில் 5 அணிகள் விளையாடவுள்ளதுடன், மொத்தமாக 24 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான சர்வதேச வீரர்கள் தெரிவுக்கு ஐசிசியின் முழு அங்கத்துவ நாடுகளும் தங்களது ஒப்புதலை வழங்கியுள்ளதுடன், இணை உறுப்பு நாடுகளும் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளன.