பிக்பேஷ் T-20 லீக்கில் அறிமுகமாகிறார் டி வில்லியர்ஸ்

149
image courtsey - BBL Twitter

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக்பேஷ் T-20 லீக் கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேர்ன் ஹீட் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் 360 பாகை என்று அழைக்கப்படுகின்ற 35 வயதான டி வில்லியர்ஸ், கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் அவர் பங்கேற்று வருகின்றார்.

“த ஹன்ரட்” கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் லசித் மாலிங்க

அடுத்த ஆண்டின் (2020) நடுப்பகுதியில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள…

இந்த நிலையில், எதிர்வரும் டிசம்பர் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான பிக்பேஷ் (Big Bash League) T-20 லீக் போட்டியில் முதல்தடவையாக விளையாடவுள்ளார்.

இதன்படி, பிக்பேஷ் லீக் தொடரின் பிற்பகுதி ஆட்டங்களில் பிரிஸ்பேர்ன் ஹீட் அணிக்காக அவர் விளையாடவுள்ளதுடன், ஹோர்பார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் அவர் களமிறங்கவுள்ளார்.

இந்நிலையில், பிரிஸ்பேர்ன் ஹீட் அணிக்கு விளையாடுவது தொடர்பில் டிவில்லியர்ஸ் கூறியதாவது, ”கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறேன். இதனால் பிக்பேஷ் உள்ளிட்ட முக்கியமான தொடர்களில் மாத்திரம் விளையாடி வருகிறேன்.

எனவே, பிக்பேஷ் லீக் தொடரில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விளையாடவுள்ளேன். நான் எந்த மாதிரியான கிரிக்கெட்டுடன் ஒன்றிணைய விரும்புகிறேனோ அத்தகைய கிரிக்கெட்டை விளையாடும் அணியாக பிரிஸ்பேர்ன் ஹீட் விளங்குகின்றது.

பந்து வீச்சை அடித்து நொறுக்கக் கூடிய அணியாகவே பிரிஸ்பேர்ன் மைதானத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். பிரிஸ்பேர்னிலுள்ள கெப்பா (CAPPA) அருமையான மைதானம், அங்கு விளையாடும் போது கிரிக்கெட் எப்போதும் உயர்தரத்தில் இருக்கும்” என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, டி வில்லியர்ஸின் வருகை குறித்து பிரிஸ்பேர்ன் ஹீட் அணியின் பயிற்சியாளர் டெரன் லீமன் பெரு கருத்து வெளியிடுகையில்,

உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் ஒவ்வொரு நாளும் உருவாவதில்லை. அதுவும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஒரு வீரர் இந்தத் தொடரில் விளையாடுவது பி.பி.எல் கிரிக்கெட்டில் இன்னும் திறமையான வீரர்களை உருவாக்கும். அதேபோல, அவருடன் முதல்தடவையாக செயற்படுகின்ற வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியளிக்கிறது.

MCC இன் தலைவராக பொறுப்பேற்ற குமார் சங்கக்கார

கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட வரலாற்று நாயகர்களில்…

இவர் 360 பாகை வீரர். இவரிடம் மிகப் பெரிய திறமை உண்டு. தனித்துவமான பொறுமை மற்றும் சிந்தனையுடைய ஒரு தலைவர் என டி வில்லியர்ஸை அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஓய்வுபெற்ற டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 78 டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியதோடு ஐ.பி.எல் உள்ளிட்ட முன்னணி T20 லீக் தொடர்களில் விளையாடியுள்ள அனுபவமுள்ள வீரர் ஆவார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க