பந்துவீச்சுப் பயிற்சியாளராகும் வாய்ப்பை நிராகரித்தார் – அகீப் ஜாவிட்

473
Aaqib Javed

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவியை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகீப் ஜாவிட் கூறியுள்ளார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த சிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் தனது பதவிக்காலத்தை நீடிக்க விரும்பவில்லை. இதனால் பங்களாதேஷ் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளரைத் தேடிவருகிறது.

இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகீப் ஜாவிட் உடன்  பேச்சுவார்த்தை நடத்துவதாக அதன் தலைவர் நஸ்முல் ஹசன் கூறியிருந்தார். இதற்கிடையில் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவியை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகீப் ஜாவிட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அகீப் ஜாவிட்  கூறுகையில் ‘‘பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியின் கிரிக்கெட் நடவடிக்கைக்கான இயக்குனர் பதவியில் தற்போதுதான் சேர்ந்துள்ளேன். கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அதற்கான வேலைகளைச் செய்துவருகிறேன். இதனால் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவியை மேற்கொள்வது சாத்தியம் இல்லை.

ஒருவேளை, 2ஆவது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் முடிந்தவுடன் பகுதி நேரப் பயிற்சியாளராக வேண்டுமென்றால் செய்யலாம். உறுதியாக முழுநேர பயிற்சியாளராக இருக்க முடியாது. தற்போது நான் நீண்ட காலம் குவாலண்டர்ஸ் அணியுடன் செல்ல உடன்பட்டுள்ளேன். இந்த நிலையில்பங்களாதேஷ் அணியின் முழுநேர பயிற்சியாளர் பதவியை எடுத்துக்கொள்வது நியாயமாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்