இலங்கை தேசிய அணியுடன் இணையும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

Sri Lanka Cricket

142
Aaqib Javed is appointed as Fast Bowling Coach

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகீப் ஜாவெட் நியமிக்கப்பட்டுள்ளார். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரான ஆகிப் ஜாவெட் மே.தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தின் நிறைவுவரை இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

>> அதிரடி வெற்றியோடு ஒருநாள் தொடரினை சமப்படுத்திய இலங்கை

ஆகிப் ஜாவெட் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளை ஒட்டுமொத்தமாக வீழ்த்தியுள்ளார். அதுமாத்திரமின்றி 1992ம் ஆண்டு பாகிஸ்தான் உலகக்கிண்ணம் வெல்லும் போது குறித்த அணியிலும் இடம்பிடித்திருந்தார். 

ஆகிப் ஜாவெட் இதற்கு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பயிற்றுவிப்பாளராகவும், ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அபிவிருத்திக்கான பொறுப்பொன்றிலும் செயற்பட்டுள்ளார். 

இவருடைய பயிற்றுவிப்பின் கீழ் 2004ம் ஆண்டு பாகிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 2004ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றதுடன், 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணி T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் போது அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். 

இவர் தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாஹுர் கெலண்டர்ஸ் அணியின் பணிப்பாளர் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<