எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மலேசியாவில் இடம்பெறவுள்ள 20 வயதிற்கு உட்பட்ட ஆசிய கனிஷ்ட ரக்பி தொடரிற்கான 39 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் குழாமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2015/16ஆம் ஆண்டு பருவகாலப் போட்டிகள் மற்றும் நேற்று முன்தினம் ஹெவலொக் மைதானத்தில் இடம்பெற்ற கொழும்பு பாடசாலைகளை ஒன்றிணைத்த அணி மற்றும் கண்டி பாடசாலைகளை ஒன்றிணைத்த அணி என்பவற்றிற்கு இடையிலான போட்டி என்பவற்றில் இருந்தே இந்த 39 பேர் கொண்ட குழாமிற்கான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி தற்பொழுது தெரிவாகியுள்ள குழாமில் கொழும்பு பாடசாலைகளின் வீரர்கள் 27 பேரும், கண்டி பாடசாலைகளின் வீரர்கள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர்.
நேற்று இந்தக் குழாமின் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த இளம் இலங்கை அணிக்கான பயிற்சிகளை, இறுதிப் பருவ காலத்தில் இசிபதன கல்லூரியின் பயிற்சியாளராக செயற்பட்ட நில்பர் இப்ராஹிம் வழங்கவுள்ளார்.
தற்பொழுது தெரிவு செய்யப்பட்டுள்ள குழாமின் முழு விபரம்
வகீஷா வீரசிங்க, அதீஷ எஷான், குஷான் இன்துனில், லஹிரு விஷ்வஜித், இசுரு உதயகுமார, கயான் விக்ரமரத்ன, ஹரித் பன்டார, ரனிது பத்மசன்க (இசிபதன கல்லூரி)
எஸ். கவிஷ்க (கிங்ஸ்வுட் கல்லூரி)
உதய சன்ஜுல (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி)
நிகில குனதீர, அஷோக் விஜேகுமார் (ரோயல் கல்லூரி)
நிரோஷ் பெரேரா, ஜனித் லக்சர, தனுஜ மதுரங்க, சுபுன் திலான் (சயன்ஸ் கல்லூரி)
பி. துல்ஷான், தினுக் அமரசிங்க, சாமுவேல் மதுவத்த (புனித அந்தோனியார் கல்லூரி)
ரமேஷ் பிரியன்க (புனித ஜோசப் கல்லூரி)
ரவின் யாபா, சன்தேஷ் ஜயவிக்ரம, ரொமேஷ் பெர்னாந்து (புனித பேதுரு கல்லூரி)
தனுஜ விஜேரத்ன, அஷ்வந்த ஹேரத், பன்துல டி சில்வா, நவீன் ஹேனகன்கனமகே (புனித தோமியார் கல்லுரி)
ராஹுல் கருனாதிலக, சாலிந்ர அலஹகோன், அவிஷா பிரியன்கர, ஷவீன் எகனாயக, லஷான் விஜேசூரிய, அனுக பொதகொட, கேஷான் பெதியகொட (திரித்துவக் கல்லூரி)
எச். பெர்னாந்து (வித்யார்த்த கல்லூரி)
சயான் சபர், தேஷான் விமுக்தி, அவன்த லீ (வெஸ்லி கல்லூரி)
ஏ.வாஜித் (ஸாஹிரா கல்லூரி)