மஹேலவிற்கு முரளிதரன் எழுதிய மடல்

377

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) வரலாற்று கதாநாயகர் விருதினை (Hall of Fame) வென்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இந்த விருதினை ஏற்கனவே வென்ற வீரராக காணப்படும் முத்தையா முரளிதரன் அவருக்காக மடல் ஒன்றினை வரைந்திருக்கின்றார்.

குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் போன்றோரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இந்த விருதினை வென்ற மூன்றாவது நபராக மாறியுள்ள மஹேல ஜயவர்தனவிற்கு, முத்தையா முரளிதரன் வரைந்த மடலின் தமிழ் வடிவமே இது.

”இது மஹேலவிற்கு”

”ICC இன் வரலாற்று கதாநாயகர்களில் (Hall of Fame) உள்வாங்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள். இது எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் அவரினை இனம்கண்டு நீண்ட கால சாதனைகளுக்காக கிடைக்கும் ஒரு மிகப் பெரிய கௌரவமாகும்.”

NCC எதிர் நீர்கொழும்பு இடையிலான போட்டி ‘டை’யில் முடிவு

”கிரிக்கெட் வீரர்கள் உண்மையாக ஏங்குகின்ற விடயங்களில் ஒன்றாக இது இருக்கின்றது. எங்களது தொழில் வாழ்க்கையில் நாங்கள் விரும்புகின்ற ஒன்றினை தொடர்ச்சியாக செய்ததினை அதிர்ஷ்டமாக கருதுகின்றோம். எனவே, அதி சிறந்த விளையாட்டுவீரர்களுடன் இணைவது உண்மையில் பிரமாண்டமாக இருப்பதோடு, நீண்ட காலம் சிந்தையில் வைத்திருக்கும் விடயமாகவும் உள்ளது.”

”இந்த வாழ்நாள் விருது கடந்த வருடங்களில் உங்கள் நண்பர்களிடம் இருந்தும், உங்கள் போட்டியாளர்களிடம் இருந்தும் ICC இடம் இருந்தும் பெற்ற மரியாதையினை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. எனவே, இதில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது விஷேடமானது.”

”என்னைப் பொறுத்தவரை நான் ICC இன் வரலாற்று கதாநாயகர்களுக்குள் உள்வாங்கப்பட்ட முதல் இலங்கையனாக மாறியதனை ஆச்சரியமாக பார்த்திருந்தேன். இப்போது என் நண்பனான நீங்களும் இதற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றீர்கள். இது எனக்கு மிகவும் பெருமையினைத் தருகின்றது. ஏனெனில் இலங்கையின் கிரிக்கெட்டுக்காகவும், உலக கிரிக்கெட்டுக்காகவும் நீங்கள் உங்கள் தொழில்வாழ்க்கையில் செய்தவற்றை நான் அறிவேன் – நீங்கள் சிறப்பான ஒருவர்.”

”உங்களின் விளையாட்டு வாழ்க்கையினை பின்னோக்கி பார்க்கும் போது, நீங்கள் 2011ஆம் ஆண்டு ICC இன் உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரு சிறந்த நூறு ஓட்டங்களை பெற்றிருந்தீர்கள். நாங்கள் கிண்ணம் வெல்லாத போதும், அது ஒரு விஷேட இன்னிங்ஸ் ஆக அமைந்திருந்தது.”

மஹேல ஜயவர்தனவிற்கு ICC இன் உயர் கௌவரம்

”ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் விளையாடிய இன்னிங்ஸ் ஒன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. அது 2008ஆம் ஆண்டு பங்களாதேஷில் நீங்கள் பெற்ற 166 ஓட்டங்களாகும். இரண்டாம் இன்னிங்ஸில் பெறப்பட்ட இந்த ஓட்டங்கள் சுழலுக்கு அதிக சாதகம் கொண்ட ஒரு ஆடுகளத்தில் பெறப்பட்ட காரணத்தினால் இது சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்.”

”இதுதான் உங்களைப் பற்றிய சிறந்த விடயமாகும். நீங்கள் அதிகமான சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளதோடு அணியில் மகிழ்ச்சியாக இருந்து அதிக ஓட்டங்களையும் குவிக்கின்றீர்கள். நீங்கள் அந்த எல்லா ஓட்டங்களையும் பெறும் போது எனக்கு விக்கெட்டுக்களை எடுப்பதில்

குறைந்த அழுத்தங்கள் இருக்கும். இதனால் எனது வேலை இலகுவாகும். இதன் காரணமாகவே இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் நீங்கள் மிக முக்கியமான வீரராக உள்ளீர்கள்.”

”இதற்கு மேலதிமாக கிரிக்கெட்டை தவிர்த்துப் பார்க்கும் போது நீங்கள் சிறந்த மனிதர் என்பதோடு அன்பாகவும், மென்மையாகவும் பழகும் ஒருவர். விளையாட்டில், எல்லா சம்பியன்களும் அதிக போட்டித்தன்மை கொண்டவர்களாக இருப்பர். ஆனால், கிரிக்கெட் விளையாட்டில் இதற்கு மாற்றமாக நீங்கள் உங்களை சுற்றி ஆடுபவர்களுக்கும் சிறந்த மனிதராக இருந்தீர்கள்.”

”நீங்கள் என்னை விட சாதுவாக இருந்தீர்கள். உங்களுக்குத் தெரியும், நானும் சிலரும் உடைமாற்றும் (Dressing) அறையில் கதைப்பவர்களாக இருந்தோம். ஆனால், நீங்கள் சாதுவாக இருந்தீர்கள். நீங்கள் அந்த நேரங்களிலும் போட்டி பற்றி கரிசணையாக இருந்ததோடு, உடைமாற்றும் அறையிலும் போட்டியுடன் ஒன்றித்தவராகவே இருந்தீர்கள்.”

”நீங்கள் தலைவராக மாறிய பின்னர் உங்களின் மிருவதானதன்மையே (Calmness) பிரதான காரணியாக இருந்தது. ஏனெனில் இதில் சில வீரர்கள் அதிக ஊக்கம் (Excite) கொண்டவர்களாக இருப்பர். ஆனால், நீங்கள் அதிக ஊக்கம் பெறுகின்ற நிலையொன்றுக்கு செல்லும் போது உங்களால் தவறான முடிவுகளை மேற்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் இந்த இடங்களில் உங்களின் மிருதுவானதன்மையினை சரியான இடத்தில் வைத்திருந்தீர்கள். இதன் காரணமாகவே, உங்களால் வெற்றிகரமான ஒரு பயிற்சியாளராக இப்போது வலம் வர முடிகின்றது என நினைக்கின்றேன்.”

அரையிறுதிக்கு முன் ICU இல் சிகிச்சை பெற்ற ரிஸ்வான்

”இந்த ஒரு விடயத்திற்காக மட்டும் நீங்கள் ICC இன் வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. இது நீங்கள்

வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணிக்காக செய்த விடயங்களுக்கு கிடைத்ததாக கருதப்படுகின்றது.”

”யார் என்ற தெரிவுக்கு வந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டிருக்கும் என்பதோடு குமார் சங்கக்கார மற்றும் என்னை தவிர்த்து இதில் இணைய பொருத்தமான அடுத்த இலங்கையர் நீங்கள் தான் என்பதனை ICC உம் நினைத்திருக்கும்.”

”நீங்கள் தெரிவு செய்யப்படதற்கு நீங்கள் ஒரு சிறந்த அணித்தலைவர் வெற்றிகரமாக இருந்தது காரணமாக இருப்பதோடு, நீங்கள் தொடர்ச்சியாக ஒரு துடுப்பாட்ட வீரராகவும் ஒரு களத்தடுப்பாளராகவும் சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஏனையோரினை விட அதிகமான பிடியெடுப்புக்களை எடுத்துள்ளீர்கள். நீங்கள் இலங்கையில் உள்ள அனைவரும் பெருமைப்படும் விடயங்களை செய்துள்ளீர்கள்.”

“1997ஆம் ஆண்டு அணிக்குள் வரும் போது நீங்கள் மிகவும் இளமையான ஒருவராக இருந்தீர்கள். நான் அப்போது ஏற்கனவே சில வருடங்கள் இருந்ததோடு, நீங்கள் முதல் தடவையாக குழுவில் இணைந்த போது கூச்ச சுபாவம் கொண்டவராகவும், சாதுவானவராகவும் இருந்தீர்கள்”

“ஆனால் முதல் போட்டியில் உங்களுக்குரிய வாய்ப்பு வழங்கப்பட்ட போது நீங்கள் நிரூபித்திருந்தீர்கள். நீங்கள் துடுப்பாட்டத்தில் கொண்ட அந்த திறமைதான் உங்களிடம் எல்லோரும் பார்த்தது – நீங்கள் தான் எதிர்காலம் என்பதை அப்போதே உங்களிடம் பார்த்தோம். அது எங்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்திருந்தது.”

“நான் அப்போதே நீங்கள் அணியில் மிகச் சிறந்த துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக வருவீர்கள் என்பதனை நினைத்திருந்தேன். நீங்கள் ஆரம்பிக்கும் போது எதிர்பார்க்கப்பட்டது போன்றே தொடர்ச்சியாக இருந்ததோடு, அதே வழியிலேயே நீங்கள் ஓய்வு பெறும் வரையிலும் காணப்பட்டிருந்தீர்கள்.”

மெதிவ்ஸ், குசல் உட்பட 10 வீரர்களுக்கு LPL தொடரில் விளையாட வாய்ப்பு

“ஏனைய துணைக்கண்ட (Sub Continent) நாட்டு வீரர்களை போல நீங்களும் அந்தந்த நிலைமைகளில் சுழலுக்கு சிறப்பாக ஆடும் ஒருவராக இருந்ததோடு, உங்களை ஆட்டமிழக்கச் செய்வதும் கடினமாக காணப்பட்டிருந்தது. இன்னிங்ஸின் ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புக்கள் இருந்த போதும், நீங்கள் களத்தில் தொடர்ந்து நிற்க தொடங்கியவுடன் உங்களை ஆட்டமிழக்கச் செய்வது மிகவும் கடினமாகும் ஏனெனில், உங்களுக்கு நீண்ட நேரம் துடுப்பாடுகின்ற திறமை காணப்படுகின்றது.”

“இதில் யாருக்காவது கேள்விகள் இருக்குமெனில் அவர்களுக்கு 2016ஆம் ஆண்டில் நீங்கள் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பெற்ற 374 ஓட்டங்களை ஞாபகம் கொள்ளவும். இது நீங்கள் களத்தில் நீண்ட நேரம் நிற்பதற்கும் ஓட்டங்கள் பெறுவதற்கும் உதாரணமாக இருந்தது.”

“நீங்கள் களத்தடுப்பில், குறிப்பாக ஸ்லிப் (Slip) நிலையில் சிறந்து விளங்கியிருந்தீர்கள். நீங்கள் அங்கு நாள் முழுவதும் தங்கி பிடியெடுப்புக்களை எடுப்பவராக இருந்தீர்கள். அதே நேரம் சில்லி பொய்ன்ட் (Silly Point) நிலையிலும் நீங்கள் மிகவும் நன்றாக இருந்தீர்கள். அதற்காக, என் நண்பருக்கு, நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன்.”

”நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய பந்துவீசியிருக்கின்றேன். அதனால் என் பந்துவீச்சில் நீங்கள் நிறைய பிடியெடுப்புக்களை எடுத்தீர்கள். எனது இறுதி விக்கெட்டுக்காக நீங்கள் பிடியெடுப்பு எடுத்தது பொருத்தமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த பந்துவீச்சாளர்-களத்தடுப்பாளர் கூட்டணியினையும் விட ஜயவர்தன(பிடியெடுப்பு)-முரளிதரன்(பந்துவீச்சு) கூட்டணியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருக்கின்றது.”

”அவர்கள் உங்களை இலங்கையின் தலைவராக தேர்வு செய்தமைக்கு காரணம் நீங்கள் சிறப்பான கிரிக்கெட் வீரர் என்பதால் தான். அந்த வேலைக்கு நிறைய மூத்த வீரர்கள் இருந்த போதிலும், அனைவரினையும் களத்தில் சாந்தப்படுத்தும் உங்கள் கிரிக்கெட் மூளையால் நீங்கள் தெரிவு செய்யப்பட்டீர்கள்.”

”நீங்கள் இந்த விளையாட்டின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் – நீங்கள் இதன் காரணமாகவே ஏற்கனவே கிரிக்கெட் பயிற்சியாளராக சிறந்து விளங்கியுள்ளீர்கள். மேலும் 20 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் பணியாற்றியதனால், சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய அனுபவம் உங்களிடம் உள்ளது. ஒரு பயிற்சியாளராக, நீங்கள் ஒரு அணித்தலைவர் போல சிந்திக்க வேண்டும். எனவே நீங்கள் அந்த மாற்றத்தை மிக எளிதாக செய்து முடித்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.”

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

”நாங்கள் அனுபவித்த வேடிக்கை (Fun) தருணங்களை பார்க்கும்போது, நான் உங்களுடன் மைதானத்தில் சண்டையிட்டுள்ளேன் – எப்போதும் நான் ஒரு விக்கெட் எடுக்க விரும்பும் போது எனக்கு ஓவர் கொடுக்க வேண்டும் என்று எப்போதும் கேட்டிருக்கின்றேன். சில சமயங்களில் என்னை பந்துவீச்சாளராக உபயோகிக்க சரியான நேரம் அல்ல என்று நீங்கள் உணர்ந்திருந்தீர்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் நான் உங்களை வற்புறுத்தி பந்தை எடுத்து பந்து வீச முயற்சிப்பேன். அவை கிரிக்கெட்டில் பொதுவாக நடக்கும் விடயங்களாக இருப்பதோடு இது எல்லா பந்துவீச்சாளர்களும் செய்யும் ஒன்றாகவும் உள்ளது. இதில் சிறந்த விடயம் என்னவென்றால், நான் எப்போதும் வெற்றியாளராக இருப்பேன்.”

”நான் உங்களுக்கு எதிர்காலத்திற்குரிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் மேலும் முன்னேறுங்கள் – விட்டுக் கொடுக்க வேண்டாம். ஒரு வீரராகவும் ஒரு பயிற்சியாளராகவும் நீங்கள் சாதித்தது பிரமிப்பினை ஏற்படுத்துகின்றது.”

”உங்கள் தொழில்வாழ்க்கையின் முடிவில், நீங்கள் வீரராக சிறந்து இருந்தது போல, ஒரு பயிற்சியாளராக நாங்கள் உங்களைப் பற்றி பிரமிப்படைகின்றோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். நீங்கள் எப்போதும் சிறந்த ஒருவர்”

”முரளி”

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<