பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரி ஒருவரின் தகவலின் பிரகாரம் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி எதிர்த்தாடவுள்ளது.
மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்இ 5 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்இ இரண்டு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் என்பவற்றில் இரண்டு நாடுகளும் விளையாடவுள்ளன.
ஜூன் மாத முற்பகுதியில் இங்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் அணி முதலில் மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடும் இந்தப் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் ஜூன் 17முதல் 21 வரை நடைபெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் ஜூன் 25 முதல் 29வரையும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெத்தாராம ஆர். பிரேமதாசவிளையாட்டரங்கில் ஜூலை 3 முதல் 8வரையும் நடைபெறவுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் தம்புளையில் ஜூலை 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது போட்டி பள்ளேகலையிலும் (ஜூலை 15)இ மூன்றாவதுஇ நான்காவது போட்டிகள் கொழும்பிலும் (ஜூலை 19இ 22)இ ஐந்தாவது போட்டி ஹம்பாந்தோட்டையிலும் (ஜூலை 26) நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஜூலை 30இ ஆகஸ்ட் 1 ஆம் திகதிகளில் கொழும்பில் சர்வதேச இருபது 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.