யாழ்.வீராங்கனைகள் நேபாளத்தில் பிரகாசிப்பு

175

நேபா­ளத்தில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டுச் சம்மேள­னத்தின் 14 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான தெற்கு மற்றும் மத்­திய பிராந்­திய கால்­பந்தாட்டப் போட்டி ஒன்றில் யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியைச் சேர்ந்த சுரேந்­திரன் கௌரிஇ சிவ­னேஸ்­வரன் தர்­மிகா ஆகியோர் கோல்கள் போட்டு தங்­க­ளது ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இவர்­களில் கெளரி 14 வய­துக்­குட்­பட்ட இலங்கை பெண்கள் கால்­பந்­தாட்ட அணியின் உதவித் தலை­வி­யாவார்.

கத்­மண்டு இரா­ணுவ உடற்­கலை நிலைய மைதா­னத்தில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற இப்போட்­டியில் ஆரம்பம் முதல் இறு­தி­வரை திற­மையை வெளிப்­ப­டுத்­திய 14 வய­துக்­குட்­பட்ட இலங்கை பெண்கள் அணி போட்டி ஆரம்­பித்த 4ஆவது நிமி­டத்தில் கௌரி போட்ட கோல் மூலம் முன்­னிலை அடைந்­தது.

இந்த கோலினால் உற்­சா­க­ம­டைந்த இலங்கை பெண்கள் அணி­யினர் டிலி­னிக்கா லோச்­சனி (15 நி.)இ மெத்­மினி ஏக்­க­நா­யக்க (23 நி.)இ தனூஷி விஜே­சிங்க (32 நி.)இ அணித் தலைவி இமேஷா வர்­ண­கு­ல­சூ­ரிய (35 நி.) ஆகியோர் இடை­வே­ளைக்கு மேலும் 4 கோல்­களைப் போட்­டனர்.

இடை­வே­ளையின் பின்னர் மாலை­தீ­வுகள் அணி­யினர் தடுத்­தாடும் உத்­தியைக் கையாண்­டதால் இலங்­கை­யினால் கோல் போடு­வது சிர­ம­மாக அமைந்­தது.

எனினும் போட்டி முடி­வ­டைய சில செக்­கன்கள் இருந்த ­போது மகா­ஜ­னாவின் மற்­றொரு வீராங்­க­னை­யான சிவ­னேஸ்­வரன் தர்­மிகா 6ஆவது கோலைப் போட்டார்.