சம்மேளனக் கிண்ணத்திற்கான 2 ஆம் பிரிவு ஆசிய–பசுபிக் டென்னிஸ் தொடரின் டி குழு போட்டி ஒன்றில் இலங்கை மகளிர் அணி 0–3 என்ற ஆட்டக் கணக்கில் பசுபிக் ஓஷானியாவிடம் தோல் வியடைந்தது.
இந்தியாவின் ஹைதராபாத் உள்ளக கடின தரை அரங்கில் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
முதலாவது ஒற்றையர் போட்டியில் இலங்கையின் 16 வயது வீராங்கனை மெதிரா சமரசிங்கவை எதிர்த்தாடிய பசுபிக் ஓஷானியாவின் ஆபிகெய்ல் தேரே அப்பிசா 6–0இ 6–3 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றி கொண்டார்.
இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் திசுரி மொல்லிகொடவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஸ்டெஃவி கரூததர்ஸ் 6–2இ 6–7இ 6–1 என்ற புள்ளிகளைக் கொண்ட 2–1 என்ற செட்கணக்கில் வெற்றிகொண்டார்.
இரட்டையர் ஆட்டத்தில் அம்ரிதா முத்தையாவும் மெதிரா சமரசிங்கவும் ஜோடி சேர்ந்து விளையாடினர்.
இவர்களை எதிர்த்தாடிய பசுபிக் ஓஷானியாவின் ஸ்டெஃவி கரூததர்ஸ்இ பிரிட்டானி டீய் ஆகிய இருவரும் 6–3இ 3–6இ 6–3 என்ற புள்ளிகளைக் கொண்ட 2–1 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டு பசுபிக் ஓஷானியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.
இலங்கை மகளிர் டென்னிஸ் அணியில் நெத்மி ஹிமாஷி வடுகே நான்காவது வீராங்கனையாக இடம்பெறுகின்றார்.
விளையாடாத அணித் தலைவியாக ஷாலினி டி சில்வா செயற்படுகின்றார்.
இலங்கை அணி இக்குழுவுக்கான அடுத்த போட்டியில் இந்தோனேஷியாவை நேற்று எதிர்த்தாடவிருந்தது