உலக கிண்ண இலங்கை முதலாம் கட்டத் தெரிவில் வட 12 வீராங்கனைகள்

194

அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்­னியில் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வி­ருக்கும் உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்­டியில் பங்கு பற்­று­வ­தற்கு இலங்­கையும் தகு­தி­பெற்­றுள்­ளது.

 

இதனை முன்­னிட்டு இலங்கை வலைப்­பந்­தாட்ட உத்­தேச குழா­முக்கு வீராங்­க­னை­களைத் தெரிவு செய்யும் முதலாம் கட்டத் தேர்­வுகள் யாழ்ப்­பா­ணத்தில் அண்­மையில் நடை­பெற்­ற­போது அப்­பி­ரதே­சத்­தி­லி­ருந்து 12 வீராங்­க­னைகள் தெரி­வா­கி­யுள்­ளனர்.

இத் தேர்­வுகள் யாழ். மாவட்­டத்தில் நடை­பெற்­றது இதுவே முதல் தட­வை­யாகும்.

யாழ். வேம்­படி மகளிர் உயர்­தரக் கல்­லூரி மைதா­னத்தில் கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற தேர்­வின்­போது கேதுஷா சர்­வதன், ஜீவிதா பர­மா­னந்­த­ராஜா, சுபூசனா ஜெய­ராஜா (மூவரும் உடு­ வில் பிர­தேச செய­லகம்), அபித்தா தரு­ம­ராஜா, கீர்த்­திகா செல்­வ­ராசா, சாரங்கா ராஜ­ரட்ணம் (மூவரும் தெல்­லிப்­பழை பி.செ.), சக்தி சிவ­ராசா, கஜா­னனி கேதீஸ் ­வரன் (இரு­வரும் யாழ். பி.செ.), துஷ்­யந்தி குண­சீலன், திவ்­வியா சண்­முக­நாதன் (இரு­வரும் நல்லூர் பி.செ.), யாமினி அருந்­த­வ­ராஜா (சாவ­கச்­சேரி பி. செ.), ஸ்ரீசக்தி சந்­தி­ர­சோதி (சங்­கானை பி. செ.) ஆகியோர் இரண்டாம் கட்டத் தேர்வில் பங்­கு­பற்­று­வ­தற்கு தெரி­வா­கி­யுள்­ளனர்.

வட மாகா­ணத்­திற்­கான தெரி­வுகள் இலங்கை வலை­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் கண்­கா­ணிப்பில் யாழ். மாவட்ட வலைப்­பந்­தாட்டச் சங்­கத்­தினால் ஒழுங்­க­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இலங்கை வலைப்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் இடைக்­கால நிர்­வாகக் குழுவின் செய­லா­ளரும் இலங்கை வலைப்­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலை­வி­யு­மா­கிய ஜயந்தி சோம­சே­கரம் டி சில்வா, றோகினி பெரேரா, திசாங்­கனி கொடித்­து­வக்கு வீராங்­க­னை­களைத் தெரிவு செய்­தனர்.

இதே­வேளை, கண்டி, காலி, பொலன்­ன­றுவை, பதுளை ஆகிய மாவட்­டங்­களில் நாளை 18 ஆம் திக­தியும் கொழும்பு மாவட்­டத்தில் 19ஆம் திக­தியும் முதலாம் கட்டத் தேர்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தெரி­வுகள் ஏப்ரல் மாதம் 25,  26ஆம் திக­தி­களில் கொழும்பு புனித ஜோசப் கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறும்.

இதன் போது அதி சிறந்த வலை­பந்­தாட்ட ஆற்­றல்­மிக்க 30 முதல் 40 வீராங்­க­னைகள் உத்­தேச வலை­பந்­தாட்டக் குழா­முக்கு தெரிவு செய்­யப்­ப­டுவர். 

இவர்கள் சுமார் ஒரு­மாத காலம் உடற்ற­குதி பயிற்சிகளுக்கு உட்படுத்தப் படுவதுடன் பயிற்சிப் போட்டிகளிலும் ஈடுபடுவர்.

அதன் பின்னர் இறுதி வீராங்க னைகள் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.