புறக்கணிக்கப்படும் இலங்கை வீரர்கள்: திசர பெரேரா கவலை

206

ஐபிஎல் போட்டிகளில் சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது என்று சலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

 

ஐபிஎல் தொடரில் கடந்த 2 வருடமாக இலங்கை வீரர்கள் சென்னையில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. இந்த தடை வீரர்களின் பாதுகாப்பு காரணத்திற்காக கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டும் சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் மலிங்காஇ திசர பெரேராஇ மேத்யூஸ் ஆகியோரால் சென்னையில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் இது தங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் விடயமாக இருக்கிறது என்று பஞ்சாப் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்இ இலங்கை வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடைஇ தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்துள்ளது. சில வருடங்களாக இரு அணிகளுக்கு இடையேயான ஒற்றுமை அதிகரித்துள்ளது.

இருப்பினும் எங்கள் வீரர்களை இந்த சீசனில் தெரிவு அதிகம் தெரிவு செய்யவில்லை. இதில் என்ன காரணம் இருக்கின்றது என்று எனக்கு தெரிவில்லை என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் அணி பற்றி மேலும் கூறுகையில்இ பஞ்சாப் அணியில் திறமை வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் அதிகம் உள்ளனர். எனவே 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைப்பது என்பது கடினம். இருப்பினும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.