இடைக்கால நிர்வாக சபையில் மஹேலவிற்கு ஆலோசகர் பதவி

126

இலங்கை கிரிக்கட் சபையின் இடைக்கால நிர்வாக சபையில் மஹேலவிற்கு ஆலோசகர் பதவி

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன இலங்கை கிரிக்கட்சபையின் இடைக்கால நிர்வாக சபையில் கிரிக்கட் ஆலோசகர் பதவியை ஏற்றுக் கொள்ளஇணக்கம் தெரிவித்துள்ளார்.

 

உள்ளூர் விளையாட்டுக்களின் உட்கட்டமைப்பில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் வகையில்பாடசாலை மட்டங்கள் மற்றும் கனிஷ்ட தரத்திலான கிரிக்கட்டிற்கு மஹேல ஜெயவர்த்தன ஆலோசகராக பங்களிப்பு வழங்குவார்  என இன்று  இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கதெரிவித்துள்ளார்.

 

கடந்த சில ஆண்டுகளாக பாடசாலை தரத்தில் சிறந்த கிரிக்கட் வீரர்களை உருவாக்கதவறியதால் இருபதுக்கு இருபது போட்டிகள் பாடசாலை மட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளநிலையில் இப்போட்டிகளுக்கு மஹேல பங்களிப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு நாலந்த கல்லூரியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த மஹேல ஜெயவர்தனஇலங்கை தேசிய அணிக்குள் அணிக்குள் 1997 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டார்.

முன்னரே இருபதுக்கு இருபது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த நிலையில்நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண போட்டித் தொடருடன் சர்வதேச ஒருநாள்போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.