ஒருநாள் கிரிக்கெட் சங்கக்கார துடுப்பாட்டத்தில் 2 ஆவது இடத்தைப்

176

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்டத்தில்  2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த  நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இதன்படி தென்னாபிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் முதலாவது இடத்திலும், இலங்கை அணியின் குமார் சங்கக்கார  2 ஆவது இடத்திலும், தென்னாபிரிக்க அணி வீரர் ஹசிம் அம்லா மூன்றாவது இடத்திலுமுள்ளனர்.

பந்து வீச்சாளர்களை பொறுத்தளவில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் முதலிடத்திலுள்ளார். தென்னாபிரிக்க அணி வீரர் இம்ரான் தாஹிர் 2 ஆவது இடத்திலுள்ளார். இதேவேளை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடாத பாகிஸ்தான் வீரர் சயிட் அஜ்மல்  புள்ளிகள் அடிப்படையில் 3 ஆவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rank (+/-) Player Team Points Ave HS Rating

1 ( – ) AB de Villiers SA 902! 53.65 902 v NZ at Auckland 2015

2 ( – ) K Sangakkara SL 860 41.98 861 v Sco at Hobart 2015

3 ( – ) Hashim Amla SA 828 55.26 901 v Eng at Trent Bridge 2012

4 ( – ) Virat Kohli Ind 822 51.47 886 v Ban at Fatullah 2014

5 ( – ) T. Dilshan SL 793 39.65 802 v Sco at Hobart 2015