அரையிறுதிப்போட்டியில் இலங்கைக்கு தோல்வி

337
SL U19 vs IND U19 Semi Final Match

பங்களாதேஷில் நடைபெறும் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலககிண்ணப்போட்டியின் இறுதிப்போட்டியில்விளையாடும் வாய்ப்பை இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி  இழந்துள்ளது. இன்று (09) மீர்பூர் ஷேர் பங்களாமைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்தமையின் காரணாமாகவே இந்தவாய்ப்பை  இழந்தது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில்  வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சரித் அசலன்க முதலில் இந்தியா 19வயதிற்குட்பட்டோர் அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

 புகைப்பட ஆல்பம் – இலங்கை 19 எதிராக இந்தியா 19 – அரை இறுதி 

போட்டியின் சுருக்கம் 

இந்தியா 19 வயதிற்குட்பட்டோர்  அணி 267/9 (50)

அன்மொல்பிரிட் சிங் 72

சர்ப்ராஸ் கான் 59

வஷிங்டன் சுந்தர் 43

அசித்த பெர்னாண்டோ 43/4 (10)

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி  170/10 (42.4)

கமிந்து மென்டிஸ் 39

சம்மு அஷான் 38

விஷாட் ரந்திக 28

மயன்க் டகர் 21/3 (5.4)

இதன்படி இந்தியா 19 வயதிற்குட்பட்டோர்  அணி 97 ஓட்டங்களால் வெற்றி பெற்று எதிர்வரும்

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.19 வயதிற்குட்பட்டோருக்கானஉலககிண்ணப்போட்டியின் 2வது அரையிறுதிப்போட்டி மேற்கிந்திய தீவுகள் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும்பங்களாதேஷ்  19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும் இடையில் எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.