இலங்கை 19 வயதின்கீழ் அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
சவாத் அப்ராரின் அபார சதம், அஸிஸுல் ஹக்கிமின் அரைச் சதம் மற்றும் அல் பஹாத்தின் 6 விக்கெட் குவியல் என்பன பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
இதன்படி, ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, CCC மைதானத்தில் நேற்று (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதின்கீழ் அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.
- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு முக்கோண தொடரில் முதல் தோல்வி
- பங்களாதேஷ் உடன் ஆடும் இலங்கை U19 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
- முக்கோண ஒருநாள் தொடரின் சம்பியனாக இலங்கை A கிரிக்கெட் அணி
இதில் சாமிக்க ஹீனட்டிகல 51 ஓட்டங்களையும் தினுர தம்சித் 47 ஓட்டங்களையும் திமன்த மஹாவித்தான 39 ஓட்டங்களையும் துல்னித் சிகேரா 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்துவீச்சில் அல் பஹாத் 44 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும், இக்பால் ஹொசைன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி 34.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் சவாத் அப்ரார் 106 பந்துகளில் 14 பௌண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 130 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கீம் 69 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இளையோர் ஒருநாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (01) கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<