முக்கோண ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

7

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் முக்கோண ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் வெளியிடப்பட்டுள்ளது. 

மகளிர் முத்தரப்பு தொடருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தைக் கைப்பற்றிய ThePapare

அதன்படி இந்த முக்கோண தொடருக்காக மொத்தம் 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக் குழாம் சாமரி அத்தபத்து  தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது 

இந்த முக்கோண ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை வீராங்கனைகள் இந்தியாவினை இம்மாதம் 27ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந்த முக்கோண ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தினையும் ThePapare TV வாயிலாக பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 

இலங்கை மகளிர் குழாம் 

சாமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரட்ன, ஹர்சிதா சமரவிக்ரம, நிலக்ஷி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷா சஞ்சீவனி, ஹாசினி பெரேரா, பியூமி வத்சலா, மனுதி நாணயக்கார, தேவ்மி விஹாங்கா, இனோக்கா ரணவீர, இனோஷி பெர்னாண்டோ, ஹன்சிமா கருணாரட்ன, ரஷ்மிக்கா செவ்வந்தி, மால்கி மாதரா, சுகந்திகா குமாரி, ஆச்சினி குலசூரிய 

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<