அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான வில் புக்கோவ்ஸ்கி அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்வரிசை வீரராக களம் வரும் 27 வயது மாத்திரம் நிரம்பிய புக்கோவ்ஸ்கி உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்ததன் மூலம் 2021ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் பெற்றிருந்தார்.
>>முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் மொஹமட் சமாஸ்<<
எனினும் அவருக்கு ஏற்பட்ட தலை உபாதை (Concussions) அவரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையினை தொடர முடியாத நிலையினை தோற்றுவித்ததன் காரணமாக, வில் புக்கோவ்ஸ்கி கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
தனது ஓய்வு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த புக்கோவ்ஸ்கி தான் சுமார் 100 டெஸ்ட் போட்டிகளில் ஆட எதிர்பார்த்தும் தனக்கு ஏற்பட்ட நிலைமை காரணமாக குறிப்பிட்ட இலக்கினை அடைய முடியாமல் ஓய்வு பெறுவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 2350 ஓட்டங்கள் வரை குவித்திருக்கும் வில் புக்கோவ்ஸ்கி இறுதியாக மார்ச் மாத ஆரம்பத்தில் முதல்தரப் போட்டியொன்றில் ஆடியதோடு 7 சதங்கள் அடங்கலாக 45.19 என்கிற துடுப்பாட்ட சராசரியினை வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<