புதிய தலைவருடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும் நியூசிலாந்தின் T20I அணி

11
Michael Bracewell

சகலதுறை வீரரான மைக்கல் பிரஸ்வெல், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் நியூசிலாந்து அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

>>இலங்கை வரும் பங்களாதேஷ் U19 கிரிக்கெட் அணி<<

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே T20I மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றது. இதில் 34 வயது நிரம்பிய பிரஸ்வெல் நியூசிலாந்தினை முதன் முறையாக T20I போட்டிகளில் வழிநடாத்துகின்ற வாய்ப்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தின் T20I அணியில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்ற 7 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் டெவோன் கொன்வெய், மிச்சல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, லோக்கி பெர்குஸன், பெவோன் ஜேகப்ஸ் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆடுவதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான T20I போட்டிகளை தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐ.பி.எல். தவிர்ந்த ஏனைய T20 லீக்குகளில் முன்னர் பங்கேற்ற டிம் செய்பார்ட், பின் அலன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர், நியூசிலாந்தின் T20I குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இலங்கை சுற்றுப்பயணத்தில் ஆடாது போன அனுபவ சுழல்வீரர் இஸ் சோதி T20I குழாத்தில் இணைக்கப்பட்டிருப்பதோடு – பாகிஸ்தான் T20I தொடரில் முதல்

மூன்று போட்டிகளுக்காகவும் கைல் ஜேமிசன் மற்றும் வில்லியம் ஓ“ரூர்க்கே ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான T20I தொடர் இம்மாதம் 16ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து T20i குழாம்

மைக்கல் பிரஸ்வெல் (தலைவர்), பின் அலன், மார்க் சாப்மன், ஜேக்கப் டப்(f)பி, ஷேக் போல்க்ஸ் (4ஆவது மற்றும் 5ஆவது போட்டிகளுக்கு மட்டும்), மிட்ச் ஹேய், மேட் ஹென்ரி (4ஆவது மற்றும் 5ஆவது போட்டிகளுக்கு மட்டும்), கைல் ஜேமிசன் (1ஆவது, 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகளுக்கு மட்டும்), டேரைல் மிச்சல், ஜிம்மி நீஷம், வில்லியம் ஓ“ரூர்க்கே, டிம் ரொபின்சன், பென் சோர்ஸ், டிம் செய்பார்ட், இஸ் சோதி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<