நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐசிசி சம்பியன்ஷ் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனாக முடிசூடியுள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
52 வருடங்களின் பின்னர் வெற்றியினை பதிவு செய்த யாழ்ப்பாணக் கல்லூரி
நியூசிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா வேகமான ஆரம்பம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும் (37) சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியது.
மத்திய வரிசையில் டெரைல் மிச்சல் பொறுமையாக ஆடி 63 ஓட்டங்களையும், இறுதியாக மைக்கல் பிரேஸ்வல் 40 பந்துகளில் 53 ஓட்டங்களை வேகமாக அடித்தாட நியூசிலாந்து அணி 251 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் வருன் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார்.
இவர் 76 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்த நிலையில், அதனை தொடர்ந்து நியூசிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணி தடுமாறியது. இருப்பினும் சிரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்கள், அக்ஸர் பட்டேல் 29 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராஹுல் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க 49 ஓவர்களில் இந்திய அணியை வெற்றியை தமதாக்கி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தெரிவுசெய்யப்பட, தொடரின் ஆட்டநாயகனாக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
நியூசிலாந்து – 151/7 (50), டெரைல் மிச்சல் 63, மைக்கல் பிரேஸ்வல் 53, குல்தீப் யாதல் 2/40, வருன் சக்கரவர்த்தி 2/45
இந்தியா – 254/6 (49), ரோஹித் சர்மா 76, சிரேயாஸ் ஐயர் 48, மைக்கல் பிரேஸ்வல் 2/28, மிச்சல் சேன்ட்னர் 2/46
முடிவு – இந்தியா 3 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<