இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான (2024) தேசிய சுப்பர் லீக் (NSL) நான்கு நாட்கள் கொண்ட தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை போட்டித் தொடரில் யாழ்ப்பாணம், காலி, கண்டி, கொழும்பு மற்றும் தம்புள்ளை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஐந்து அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரானது இம்மாதம் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அத்துடன், போட்டிகள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஆர். பிரேமதாச மைதானம், தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம், பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் SSC. மைதானம் உள்ளிட்ட ஆறு மைதானங்களில் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு அணியும் முதல் சுற்றில் 8 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அக்டோபர் 6ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அதேபோல, இம்மாதம் 13 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் காலி மற்றும் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<