சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து விலகிய ஆஸி. வீரர்

ICC Champions Trophy 2025

10
ICC Champions Trophy 2025

காயம் காரணமாக நடப்பு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து மெத்யூ ஷார்ட் விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக கூப்பர் கன்னொலி அவுஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் குழு நிலைப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், குழு நிலை போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில், துபாயில் நாளை (மார்ச் 04) நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளும், நாளை மறுநாள் (மார்ச் 5) லாகூரில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதனிடையே, அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மெத்யூ ஷார்ட் தற்போது இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த கூப்பர் கன்னொலி அவுஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயது இடதுகை சகலதுறை வீரரான கன்னொலி அவுஸ்திரேலிய அணிக்காக இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் அதில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. இதனால் அவருக்கு நாளை நடைபெறவுள்ள போட்டியில் இறுதிப் பதினொருவர் அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<