இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியின் புதிய தலைவராக அஜின்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியின் தலைவராக சிரேயாஸ் ஐயர் செயற்பட்டிருந்த நிலையில், அந்த அணி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.
>>முத்தரப்பு தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் இலங்கை A அணி<<
எனினும் இந்த ஆண்டில் சிரேயாஸ் ஐயர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன், அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடிக்கு (இந்திய ரூபாய்) வாங்கியிருந்தது.
எனவே புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டயாத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஷ் இம்முறை ஏலத்தில் 1.5 கோடியான அடிப்படை விலைக்கு வாங்கிய அஜின்கியா ரஹானேவை தலைவராக நியமித்துள்ளது.
அதேநேரம் 23.75 கோடிக்கு கொல்கத்தா அணியில் வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் அணியின் உப தலைவராக பெயரிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<