ஆஸி. அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடவிருக்கும் மேற்கிந்திய தீவுகள்

27
Australia tour of West Indies 2025

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

>>முத்தரப்பு தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் இலங்கை A அணி<<

ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. 

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பார்படோஸில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு, இரண்டாவது போட்டிக்கான மைதானம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

அதேநேரம் தொடரின் மூன்றாவது போட்டி பகலிரவு நடெஸ்ட் போட்டியாக ஜமெய்க்காவில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. 

இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மேற்கிந்திய தீவுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக மேற்கிந்திய தீவுகளில் கடந்த 2018ஆம் ஆண்டு பகலிரவு டெஸ்ட் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டதோடு, குறிப்பிட்ட போட்டியில் இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியமை சுட்டிக்காட்டத்தக்கது. 

டெஸ்ட் தொடர் அட்டவணை  

முதல் போட்டி ஜூன் 25 – பார்படோஸ் 

 

இரண்டாவது போட்டி ஜூலை 03 – TBC 

 

மூன்றாவது போட்டிஜூலை 12 – ஜமெய்க்கா – (பகலிரவு) 

  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<