சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் பக்கார் சமான்

Champions Trophy 2025

55
Fakhar Zaman ruled out of Champions Trophy

2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்வரிசைத் துடுப்பாட்டவீரரான பக்கார் சமான் வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>தசுன் ஷானகவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அபராதம்<<

பக்கார் சமான் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் நியூசிலாந்துடன் ஆடிய போட்டியில் களத்தடுப்பினை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட உபாதையே பக்கார் சமான் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேற காரணமாகவும் அமைந்திருக்கின்றது.

பக்கார் சமான் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட மீண்டும் மைதானம் வந்திருந்த போதும் அவர் துடுப்பாடும் சந்தர்ப்பத்தில் அவஸ்தைக்கு முகம் கொடுத்தனை அவதானிக்க முடியுமாக இருந்தது.

அத்துடன் நியூசிலாந்தோடு பாகிஸ்தான் தோல்வியுற்ற போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக 47 பந்துகளை முகம் கொடுத்து 21 ஓட்டங்கள் பெற்ற பக்கார் சமான், பாபர் அசாமுடன் இணைந்து 65 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாக பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் பக்கார் சமானின் பிரதியீட்டு வீரராக பாகிஸ்தான் குழாத்தில் இமாம்-உல்-ஹக் உள்வாங்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை (23) எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<