மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் முஜிபுர் ரஹ்மான்

45

இந்தப்பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக உள்வாங்கப்பட்டிருந்த இளம் சுழல்பந்துவீச்சாளரான அல்லா கசான்பரிற்கு உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

அந்தவகையில் ஆப்கானின் இளம் சுழல்வீரரான அல்லா கசான்பாரின் பிரதியீடாக அதே நாட்டினைச் சேர்ந்த மற்றுமொரு சுழல்வீரரான முஜிபுர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் 

இலங்கை – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!

18 வயது நிரம்பிய கசான்பார் ஆப்கானிஸ்தானின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே தற்போது IPL போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்திருப்பதோடு, அவர் குணமாக இன்னும் நான்கு மாத கால இடைவெளி வரை தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணி பிரதியீட்டு வீரராக உள்வாங்கியுள்ள முஜிபுர் ரஹ்மான் SA20 லீக் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரிலும் அண்மையில் பங்கேற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது 

இந்த ஆண்டுக்கான IPL தொடரானது மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<