சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணியானது 174 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>IPL 2025 முதல் போட்டியில் கொல்கத்தா – பெங்களூர் அணிகள்<<
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (14) இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர்.
இப்போட்டிக்கான இலங்கை அணி அவிஷ்க பெர்னாண்டோவிற்குப் பதிலாக நிஷான் மதுஷ்கவினை இணைத்துக் கொண்டது. தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த பெதும் நிஸ்ஸங்க 04 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
எனினும் மறுமுனையில் களமிறங்கிய நிஷான் மதுஷ்க பொறுப்புடன் ஆடியதோடு ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தினையும் பூர்த்தி செய்தார். பின்னர் ஆட்டமிழந்த அவர் 70 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 51 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
ஆகியோர் இலங்கைத் தரப்பினை பலப்படுத்தினர். இதன் காரணமாக இலங்கை அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக குசல் மெண்டிஸ் தன்னுடைய ஐந்தாவது ஒருநாள் சதத்தோடு 115 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் சரித் அசலன்க 66 பந்துகளில் அதிரடி அரைச்சதத்தோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் பெற்றார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பாக பென் வோர்ஷியிஸ், ஆரோன் ஹார்டி, ஷோன் எப்போட் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
>>சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் ஜஸ்பிரிட் பும்ரா<<
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 282 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியானது 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலிய துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 29 ஓட்டங்கள் பெற, துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுக்களையும் அசித பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவாக, தொடர் நாயகன் விருதினை சரித் அசலன்க பெற்றுக் கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b Aaron Hardie | 6 | 20 | 1 | 0 | 30.00 |
Nishan Madushka | c Adam Zampa b Ben Dwarshuis | 51 | 70 | 4 | 1 | 72.86 |
Kusal Mendis | c Matthew Short b Adam Zampa | 101 | 115 | 11 | 0 | 87.83 |
Kamindu Mendis | b Sean Abbott | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Charith Asalanka | not out | 78 | 66 | 6 | 3 | 118.18 |
Janith Liyanage | not out | 32 | 21 | 3 | 2 | 152.38 |
Extras | 9 (b 0 , lb 4 , nb 0, w 5, pen 0) |
Total | 281/4 (50 Overs, RR: 5.62) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ben Dwarshuis | 10 | 1 | 47 | 1 | 4.70 | |
Aaron Hardie | 9 | 0 | 60 | 1 | 6.67 | |
Sean Abbott | 10 | 0 | 41 | 1 | 4.10 | |
Matthew Short | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Tanveer Sangha | 5 | 0 | 34 | 0 | 6.80 | |
Adam Zampa | 8 | 0 | 47 | 1 | 5.88 | |
Glenn Maxwell | 4 | 0 | 23 | 0 | 5.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Matthew Short | lbw b Asitha Fernando | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Travis Head | c Vishwa Fernando b Asitha Fernando | 18 | 18 | 3 | 0 | 100.00 |
Jake Fraser McGurk | c Charith Asalanka b Asitha Fernando | 9 | 9 | 2 | 0 | 100.00 |
Steve Smith | lbw b Wanindu Hasaranga | 29 | 34 | 3 | 1 | 85.29 |
Josh Inglis | b Dunith Wellalage | 22 | 27 | 4 | 0 | 81.48 |
Aaron Hardie | c Kamindu Mendis b Wanindu Hasaranga | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Glenn Maxwell | b Dunith Wellalage | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Sean Abbott | lbw b Wanindu Hasaranga | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Ben Dwarshuis | c Eshan Malinga b Dunith Wellalage | 9 | 11 | 0 | 1 | 81.82 |
Adam Zampa | b Dunith Wellalage | 8 | 9 | 1 | 0 | 88.89 |
Tanveer Sangha | not out | 5 | 16 | 0 | 0 | 31.25 |
Extras | 2 (b 0 , lb 0 , nb 1, w 1, pen 0) |
Total | 107/10 (24.2 Overs, RR: 4.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 4 | 0 | 23 | 3 | 5.75 | |
Maheesh Theekshana | 3 | 0 | 11 | 0 | 3.67 | |
Dunith Wellalage | 7.2 | 0 | 35 | 4 | 4.86 | |
Eshan Malinga | 3 | 0 | 15 | 0 | 5.00 | |
Wanindu Hasaranga | 7 | 2 | 23 | 3 | 3.29 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<