IPL தொடரின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய தலைவராக அந்த அணியின் துடுப்பாட்ட வீரர் ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக கடந்த ஆண்டு பெப் டு பிளெசிஸ் செயற்பட்டிருந்த நிலையில் அவர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தொடருக்கான ஏலத்தில் பெங்களூர் அணிக்காக வாங்கப்படவில்லை.
>>அசத்தல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை ஆரம்பம் செய்த இலங்கை அணி<<
இந்த நிலையில் அணியின் தலைவராக விராட் கோஹ்லி அல்லது ரஜத் பட்டிதார் ஆகியோரில் ஒருவர் செயற்படுவர் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
அந்த வகையில் விராட் கோஹ்லியிடம் அணித்தலைமை பொறுப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதும், அவர் அதனை ஏற்கவில்லை என்ற செய்திகளும் வெளியாகியிருந்தன. எனவே ரஜத் பட்டிதார் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<