சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் 16 பேர் அடங்கிய இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>இலங்கை – ஆஸி. ஒருநாள் தொடருக்கான டிக்கெட் விலைகள் அறிவிப்பு<<
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் இரு அணிகளும் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நாளை மறுதினம் (12) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகுகின்றது.
இந்த ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை குழாத்தில் நியூசிலாந்து தொடரில் பங்கேற்ற அதே வீரர்கள் இணைக்கப்பட்டிருக்க, இளம் சகலதுறைவீரரான சமிந்து விக்ரமசிங்கவிற்கு மாத்திரம் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளும் (12 மற்றும் 14 ஆம் திகதிகளில்) பகல் நேர ஆட்டங்களாக நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இலங்கை ஒருநாள் குழாம்
- சரித் அலசன்க (தலைவர்)
- பெதும் நிஸ்ஸங்க
- அவிஷ்க பெர்னாண்டோ
- குசல் மெண்டிஸ்
- கமிந்து மெண்டிஸ்
- ஜனித் லியனகே
- நிஷான் மதுஷ்க
- நுவனிது பெர்னாண்டோ
- வனிந்து ஹஸரங்க
- மகீஷ் தீக்ஸன
- துனித் வெல்லாலகே
- ஜெப்ரி வன்டர்செய்
- அசித பெர்னாண்டோ
- லஹிரு குமார
- மொஹமட் சிராஸ்
- எஷான் மலிங்க
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<