சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான டிக்கெட் விலைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு – ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் விலைகள் 500 ரூபா முதல் 240,000 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளன.
இதன்படி, ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.srilankacricket.lkv) பெற்றுக்கொள்ள முடியும்.
- தோல்வியின் விளிம்பினை நெருங்கும் இலங்கை கிரிக்கெட் அணி
- திடீர் ஓய்வை அறிவித்தார் அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்
- அவுஸ்திரேலிய அணியினை பலப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கெரி ஜோடி
அதுமாத்திரமின்றி ஒருநாள் போட்டிகள் நிறைவடையும் வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொழும்பு – ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கொழும்பு வித்தியா மாவத்தை போன்ற இடங்களில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 12ஆம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் விலைகள்
- C மற்றும் D அடித்தட்டு – 500
- C மற்றும் D உயர்தட்டு – 2000
- B அடித்தட்டு – 3000
- B உயர்தட்டு – 4000
- A அடித்தட்டு – 3000
- A உயர்தட்டு – 4000
- Grand Stand (Top Level) – 7500
- A உயர்தட்டு – 240,000 (கார்ப்பரேட் பெட்டிகள் 16 இருக்கைகள் கொண்டது)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<