”இந்துக்களின் பெரும் போர் – 2025 ” கிரிக்கெட் போட்டி அனுசரணையாளராக ஜனசக்தி

40

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பாடசாலை அணிகள் இடையிலான ”இந்துக்களின் பெரும் போர்” கிரிக்கெட் போட்டிக்கு 2025ஆம் ஆண்டு ஜனசக்தி குழுமம் (JXG) அனுசரணை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>Photos – Battle of the Hindus 2025 – Press Conference

”14ஆவது இந்துக்களின் பெரும் போர்” கிரிக்கெட் போட்டி பெப்ரவரி மாதம் 07ஆம் மற்றும் 08ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது.

அதன்படி இந்த கிரிக்கெட் போட்டிக்கு பிரதான அனுசரணையாளர்களாக இலங்கையின் காப்புறுதி முன்னோடிகளான ஜனசக்தி குழும நிறுவனம் மூன்றாவது தடவையாக தொடர்ச்சியாக செயற்படவிருக்கின்றது. இந்த விடயம்  தொடர்பில் விளக்கம் வழங்கும் ஊடக நிகழ்வு நேற்று (31) கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் ஜனசக்தி குழுமத்தின் முக்கிய நிர்வாகிகளோடு, இரு பாடசாலைகளினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த போட்டிக்கு அனுசரணை வழங்கும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனசக்தி குழும முகாமையாளர் (Managing Director of JXG Group) ரமேஷ் சாப்ட்டர் ”வரலாற்று பெருமைகள் கொண்ட இந்துக்களின் பெரும் போர் கிரிக்கெட் போட்டிக்கு தாம் அனுசரணை வழங்குவதனை கௌரவமாக கருதுவதோடு, இந்தப் போட்டித் தொடர் வாயிலாக இளம் திறமைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதில் சந்தோசம் அடைவதாகவும் தெரிவித்திருந்தார்.”

இந்துக்களின் பெரும் போர் – 2025 மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள ThePapare உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<