வணிக சேவைகள் ‘E’ பிரிவு 25 ஓவர் லீக் கிரிக்கெட் தொடருக்கு 22வது ஆண்டாக டேவிட் பீரிஸ் குழுமம் அனுசரணை வழங்கியுள்ளது. இந்த தொடர் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கான காலிறுதிப் போட்டிகள் நாளை (01) ஆரம்பமாக உள்ளது.
இப் போட்டியின் ஆரம்ப சுற்றில் 14 அணிகள் 3 குழுக்களில் போட்டியிட்டதுடன், காலிறுதிச் சுற்றுக்கு 8 அணிகள் தெரிவாகியதுடன், அந்த அணிகள் மூன்று குழுக்களின் கீழ் போட்டியிடவுள்ளன.
இதன்படி, முதலாவது காலிறுதியில் ஜோர்ஜ் ஸ்டீவர்ட் எதிர் ஜோன் கீல்ஸ் குழுமம் அணிகளும், இரண்டாவது காலிறுதியில் ஹேலிஸ் குழு ‘B‘ எதிர் ஜனசக்தி குழுமம் அணிகளும், மூன்றாவது காலிறுதியில் மோரிசன் எதிர் அமானா தக்காபுல் அணிகளும், நான்காவது காலிறுதியில் செலிங்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் எதிர் நெஷனல் டெவலப்மென்ட் வங்கி அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
- இலங்கை கிரிக்கெட்டின் அனுசரணையாளர்களாக இந்தியாவின் அமுல் நிறுவனம்
- டயலொக் அனுசரணையில் நடைபெறவுள்ள 90வது புனிதர்களின் சமர்!
எனவே, நாளை (1) ஆரம்பமாகும் காலிறுதிப் போட்டிகள் பெப்ரவரி 5ஆம் திகதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது என அண்மையில் கொழும்பு வர்த்தக சேவைகள் சங்க விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் மகேஷ் டி. அல்விஸ் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தப் போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், தொடர் நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் சிறந்த வீரர் ஆகிய 4 விருதுகளையும் டேவிட் பீரிஸ் குழுமம் வழங்க உள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு; பெப்ரவரி 11ஆம் திகதி நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் போட்டியில் ஸ்டபர்ட் மோட்டர் கம்பனி அணியை 3 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஹேலீஸ் குழுமம் ‘B‘ அணி சம்பியனானது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<