இன்று (27) நடைபெற்று முடிந்த 14ஆவது பருவத்திற்கான பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் அணியானது, சிட்னி தன்டர்ஸை வீழ்த்தி தொடரில் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
>>ஐசிசி இன் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்
டிசம்பர் மாதம் தொடக்கம் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தொடரின் பிளே ஒப் போட்டிகள் மூலம் ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் மற்றும் சிட்னி தன்டர்ஸ் ஆகியவை இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
ஹோபர்ட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஹோபர்ட்ஸ் ஹர்ரிகேன்ஸ் அணியானது முதலில் சிட்னி தன்டர்ஸை முதலில் துடப்பாடப்பணித்தது.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹோபர்ட்ஸ் ஹர்ரிகேன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தது. ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் சங்கா 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 32 பந்துகளில் 48 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் பந்துவீச்சு சார்பில் ரைலி மெரேடித் மற்றும் நேதன் எல்லிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர். பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 183 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய மைக்கல் ஓவன் அதிரடி சதம் விளாசினார். இந்த சதத்தின் உதவியோடு ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் அணியானது 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்கள் பெற்று போட்டியின் வெற்றி இலக்கினை எட்டியது.
>>இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை U19 மகளிர் அணி தோல்வி
ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் துடுப்பாட்டம் சார்பில் வெறும் 42 பந்துகளை எதிர்கொண்ட மைக்கல் ஒவன் 11 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் எடுத்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகனாக மைக்கல் ஒவன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
சிட்னி தன்டர்ஸ் – 182/7 (20) ஜேசன் சங்கா 67, டேவிட் வோனர் 48, நேதன் எல்லிஸ் 23/3, ரைலி மெரேடித் 27/3
ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் – 185/3 (14.1) மைக்கல் ஒவன் 108(42), தன்வீர் சங்கா 43/2
முடிவு – ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் 7 விக்கெட்டுக்களால் வெற்றி