ஆஷஸ் தொடர் தவிர்த்து 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இலவசமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் முதல் டெஸ்ட் தொடராக அவுஸ்திரேலியா அணியின் இலங்கை சுற்றுப்பயணம் அமையவுள்ளது.
இதன்படி, அவுஸ்திரேலியா அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு உரிமையை Seven Network ஊடக நிறுவனம் பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை அவுஸ்திரேலியாவில் ஒளிபரப்புச் செய்வதற்கு இதுவரை எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனமும் முன்வராததால், போட்டிகளைப் பார்க்கும் வாய்ப்பு அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்து இருந்தது.
இருப்பினும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள், மகளிர் சர்வதேசப் போட்டிகள் மற்றும் பிக் பாஷ் லீக் உள்ளிட்ட போட்டித் தொடர்களை ஒளிபரப்புச் செய்யும் Seven Network ஊடக நிறுவனம் அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளது. இதனை ‘free-to-air’ தொலைக்காட்சிகள் (கட்டணமின்றி பார்க்கக்கூடிய தொலைக்காட்சிகள்) மற்றும் 7 plus செயலி மூலம் ஒளிபரப்புச் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
- இலங்கை – ஆஸி. டெஸ்ட் தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு
- ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம்
கடந்த மூன்று தசாப்தங்களில் அவுஸ்திரேலியா ஆடவர் அணி விளையாடிய அனைத்து டெஸ்ட் சுற்றுப்பயணங்களும் அவுஸ்திரேலியாவில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. கடைசியாக 1994ஆம் ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது தான் அவுஸ்;திரேலியாவில் டெஸ்ட் போட்டி மறு ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
1997ஆம் ஆண்டு அவஸ்திரேலியர் அணி தென்னாப்பிரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, அவுஸ்திரேலியாவில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் அல்லாத எந்த தொடரும் இதுவரை ‘கசநந–வழ–யசை‘ தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படவில்லை என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனவே, 28 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இலவச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆஷஸ் அல்லாத முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடராக அவுஸ்திரேலியா அணியின் இலங்கை சுற்றுப்பயணம் அமையவுள்ளது.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29ஆம் திகதி காலியில் ஆரம்பமாக உள்ளது. அதேபோல, மகளிருக்கான ஆஷஸ் டெஸ்ட் போட்டியும் ஜனவரி 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<