சம்பியன்ஷ் கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

Champions Trophy 2025

60
New Zealand pick Ben Sears, Will O'Rourke for Champions Trophy

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சம்பியன்ஷ் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்தின் 15 பேர்கொண்ட குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிச்சல் சென்ட்னர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து குழாத்தில் வில்லியம் ஓ ரோர்க் மற்றும் பென் சீர்ஸ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

>>ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி<<

இவர்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன், லொக்கி பேர்குஸன் மற்றும் டெவன் கொன்வே ஆகியோர் சம்பியன்ஷ் கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

கேன் வில்லியம்சன் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த சில தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடிவந்த வீரர்களுக்கு அணியில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் ரச்சின் ரவீந்ரா, டெரைல் மிச்சல், கிளேன் பிலிப்ஸ், டொம் லேத்தம் மற்றும் மார்க் சேப்மன் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடங்களை தக்கவைத்துள்ளனர்.

நியூசிலாந்து அணியானது சம்பியன்ஷ் கிண்ணத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளின் குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், முதல் போட்டியில் பெப்ரவரி 19ம் திகதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து குழாம்

மிச்சல் சேன்ட்னர் (தலைவர்), மைக்கல் பிரேஸ்வல், மார்க் செப்மன், டெவன் கொன்வே, லொக்கி பேர்குஸன், மெட் ஹென்ரி, டொம் லேத்தம், டெரைல் மிச்சல், வில்லியம் ரோர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்ரா, பென் சீர்ஸ், நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<