2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் ஒழுங்கு செய்யப்பட்ட போதும் தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் ஒன்றான இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்ததனை குறிப்பிட்ட தொடர் நடைபெறுவதில் சந்தேகம் நிலவியது.
>>உபாதையினால் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் குறுகிய ஓய்வு<<
எனினும் பல பேச்சு வார்த்தைகளின் பின்னர் தற்போது பாகிஸ்தான் – ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரண்டு நாடுகளிலும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடாத்துவது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு தொடரின் போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போட்டிகள் 2025ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி தொடக்கம் மார்ச் 09ஆம் திகதி வரை நடைபெறுவதோடு, தொடரின் முதல் போட்டி தொடரினை நடாத்தும் உரிமம் கொண்டிருக்கும் நாடான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கராச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
இதேவேளை இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்குபெறும் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (துபாயில்) ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேளை இந்தியா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தினை கருத்திற் கொண்டு தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு, இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் போது குறித்த போட்டியும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்படவிருக்கின்றது.
எனினும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தெரிவாகாத சந்தர்ப்பத்தில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 09ஆம் திகதி லாஹூரில் இடம்பெறும். இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பு மிக்க குழுநிலைப் போட்டி பெப்ரவரி 23ஆம் திகதி துபாயில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
அணிகள்
குழு A – இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து
குழு B – ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து
திகதி | போட்டி | மைதானம் |
பெப்ரவரி 19 | பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து | கராச்சி |
பெப்ரவரி 20 | பங்களாதேஷ் எதிர் இந்தியா | துபாய் |
பெப்ரவரி 21 | ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா | கராச்சி |
பெப்ரவரி 22 | அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து | லாஹூர் |
பெப்ரவரி 23 | பாகிஸ்தான் எதிர் இந்தியா | துபாய் |
பெப்ரவரி 24 | பங்களாதேஷ் எதிர் நியூசிலாந்து | ராவல்பிண்டி |
பெப்ரவரி 25 | அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா | ராவல்பிண்டி |
பெப்ரவரி 26 | ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து | லாஹூர் |
பெப்ரவரி 27 | பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் | ராவல்பிண்டி |
பெப்ரவரி 28 | ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா | லாஹூர் |
மார்ச் 01 | தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து | கராச்சி |
மார்ச் 02 | நியூசிலாந்து எதிர் இந்தியா | துபாய் |
மார்ச் 04 | முதல் அரையிறுதி | துபாய் |
மார்ச் 05 | இரண்டாவது அரையிறுதி | லாஹூர் |
மார்ச் 09 | இறுதிப் போட்டி | லாஹூர்/துபாய் |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<