உபாதையினால் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் குறுகிய ஓய்வு

103
Ben Stokes

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான பென் ஸ்டோக்ஸ் தனக்கு ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கும், கிரிக்கெட் போட்டிகளில் எதிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>சதீர சமரவிக்ரம நீக்கம்; ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு<<

பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்தார். இந்த நிலையில் இந்த வார ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய தமது குழாத்தினை அறிவித்திருந்தது. எனினும் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து குழாத்தில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றிருக்கவில்லை.

ஸ்டோக்ஸ் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான குழாத்தில் உள்வாங்கப்படமைக்கான பிரதான காரணமாக அவரின் உபாதை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதேநேரம் அடுத்த மூன்று மாதங்களிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினையும் பென் ஸ்டோக்ஸ் இழந்திருக்கின்றார்.

ஏற்கனவே 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரிலும் உபாதைக்குள்ளாகியிருந்த பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்ட உபாதையில் இருந்து குணமடைவதற்கு நீண்ட காலம் சென்றிருந்த நிலையில், அவர் மீண்டும் உபாதைக்குள்ளாகியது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரும் இழப்பாக மாறியிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<