தொடர் வெற்றிகளுடன் முன்னேறும் ஜப்னா டைடன்ஸ் வீரர்கள்

Lanka T10 League 2024 

6

லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் நேற்று (14) பல்லேகலயில் மூன்று போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் மழையின் தாக்கம் காரணமாக இரண்டு போட்டிகளே முழுமையாக நடைபெற்றிருந்தன.   

மழையினால் தடைப்பட்ட லங்கா T10 லீக் தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள்

ஜப்னா டைடன்ஸ் எதிர் கோல் மார்வல்ஸ் 

இந்தப் போட்டியில் ஜப்னா டைடன்ஸ் அணியானது குசல் மெண்டிஸ், டொம் கஹ்லர்-கட்மோர் ஆகியோரது அதிரடியோடு 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. குசல் மெண்டிஸ் 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 31 ஓட்டங்களை எடுக்க, கஹ்லர்-கட்மோர் 21 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார். ஜப்னா டைடன்ஸ் இந்த வெற்றியுடன் தொடரில் மூன்றாவது வெற்றியினைப் பதிவு லங்கா T10 சுப்பர் லீக் தொடரில் தோல்வியுறாத அணியாக முன்னேறுகின்றது.  

கோல் மார்வல்ஸ் – 105/7 (10) அலெக்ஸ் ஹேல்ஸ் 21(10), ட்வெய்ன் ப்ரேடோரியஸ் 18/2(2)  

 

ஜப்னா டைடன்ஸ் – 109/3 (8.3) டொம் கோஹ்லர்-கட்மோர் 32(21), குசல் மெண்டிஸ் 31(16), சமிந்து விஜேசிங்க 11/1(1.3) 

நுவரெலியா கிங்ஸ் எதிர் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் 

குசல் பெரேரா, தசுன் ஷானக்க ஆகியோரது அதிரடியுடன் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் வீரர்கள் லங்கா T10 சுப்பர் லீக்கில் இந்தப் போட்டி மூலம் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்தனர். இப்போட்டியில் குசல் பெரேரா 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் பெற்றதோடு, தசுன் ஷானக்க 10 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் ரிச்சர்ட் கீளிசனும் ஹம்பந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணிக்காக 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

நுவரெலியா கிங்ஸ் – 82/6 (10) பென்னி ஹோவெல் 29(14), ரிச்சர்ட் கீளிசன் 23/3 (2) 

 

ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் – 86/3 (7.1) குசல் பெரேரா 33(15), கைல் மேயர்ஸ் 13/1(1)  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்<<