சுற்றுலா இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்களின் போட்டி அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
>>ஷானக்கவின் அதிரடி வீண்: ஜப்னா டைடன்ஸ் லங்கா T10 லீக்கில் முதல் வெற்றி<<
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் ஆடுகின்றது. அந்தவகையில் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முதலாவதாக T20i தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் குறிப்பிட்ட T20I தொடர் 28ஆம் தோராங்கவில் ஆரம்பமாகுகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகவிருப்பதோடு குறிப்பிட்ட தொடரின் போட்டிகள் வெலிங்டனில் ஜனவரி மாதம் 05ஆம் திகதி தொடக்கம் நடைபெறுகின்றன.
சுற்றுத் தொடர் அட்டவணை
T20i தொடர்
முதல் T20i போட்டி – டிசம்பர் 28 – தோராங்கா
இரண்டாவது T20i போட்டி – டிசம்பர் 30 – தோராங்கா
மூன்றாவது T20i போட்டி – ஜனவரி 02 – நெல்சன்
ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 05 – வெலிங்டன்
இரண்டாவது ஒருநாள் போட்டி – ஹமில்டன்
மூன்றாவது ஒருநாள் போட்டி – ஓக்லேன்ட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<