ஷானக்கவின் அதிரடி வீண்: ஜப்னா டைடன்ஸ் லங்கா T10 லீக்கில் முதல் வெற்றி

Lanka T10 League 2024

3
Lanka T10 League 2024

2024ஆம் ஆண்டுக்கான லங்கா T10 லீக் தொடரில் இன்று (11) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் மூன்று போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. 

ஜப்னா டைடன்ஸ் எதிர் ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ்  

மொத்தம் ஆறு அணிகள் பங்கெடுக்கும் லங்கா T10 லீக் தொடரில் முதல் போட்டி ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் மற்றும் ஜப்னா டைடன்ஸ் அணிகள் இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களா டைகர்ஸ் அணியானது தசுன் ஷானக்கவின் அதிரடி அரைச்சதத்தோடு 10 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது 

ஷானக்க 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக வெறும் 17 பந்துகளில் 51 ஓட்டங்களை எடுத்திருந்தார். ட்ரெவின் மெதிவ் ஜப்னா டைடன்ஸ் அணிக்காக 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.   

>>பங்களாதேஷ் அணியின் தலைவராகும் லிடன் டாஸ்<<

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு ஆடிய ஜப்னா டைடன்ஸ் குறித்த இலக்கினை 8.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது. ஜப்னா டைடன்ஸ் அணியின் வெற்றியினை டொம் கோஹ்லர்-கட்மோர் அதிரடி அரைச்சதம் விளாசி உறுதி செய்தார். அவர் 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது 

போட்டிச் சுருக்கம் 

பங்களா டைகர்ஸ் – 106/8 (10) தசுன் ஷானக்க 51(17), ட்ரவீன் மெதிவ் 10/4

 

ஜப்னா டைடன்ஸ் – 107/2 (8.1) டொம்-கொஹ்லேர் கட்மோர் 57(21)

நுவரலெியா கிங்ஸ் எதிர் கொழும்பு ஜக்குவார்ஸ் 

தொடரின் இரண்டாவது போட்டியாக அமைந்த நுவரெலியா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஜக்குவார்ஸ் இடையிலான மோதல் மழையின் காரணமாக முடிவுகள் இன்றி கைவிடப்பட்டது 

போட்டிச் சுருக்கம் 

நுவரெலியா கிங்ஸ் – 79/1 (6) அவிஷ்க பெர்னாண்டோ 50(18)* 

கண்டி போல்ட்ஸ் எதிர் கோல் மார்வல்ஸ் 

மகீஷ் தீக்ஸன தலைமையிலான கோல் மார்வல்ஸ் இப்போட்டியில் கண்டி போல்ட்ஸ் வீரர்களை வீழ்த்தியது. கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் வெறும் 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் பெற்று பிரகாசித்த போதும் அது வீணாகியது. மறுமுனையில் கோல் மார்வல்ஸ் அணியின் வெற்றியினை வேகப்பந்துவீச்சாளரான பினுர பெர்னாண்டோ 09 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி உறுதி செய்தார் 

போட்டிச் சுருக்கம் 

கண்டி போல்ட்ஸ் – 100/5 (10) தினேஷ் சந்திமால் 66(25), பினுர பெர்னாண்டோ 9/3 

 

கோல் மார்வல்ஸ் – 102/3 (7.4) அன்ட்ரே பிளச்சர் 41(21)*, சகீப் அல் ஹஸன் 20(8)* 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<