பங்களாதேஷ் அணியின் வீரர் லிடன் டாஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லிடன் டாஸ் பங்களாதேஷ் அணியின் தலைவராக ஒருசில போட்டிகளில் செயற்பட்டிருந்தாலும், முதன்முறையாக தொடர் முழுவதும் தலைவராக செயற்படும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
>>SA20 லீக்கில் களமிறங்கும் துனித் வெல்லாலகே<<
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிவித்தலின் போது, லிடன் டாஸ் தலைவராக செயற்படுவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி லிடன் டாஸின் தலைமையில் களமிறங்கும் பங்களாதேஷ் அணியில். டெஸ்ட் தொடரில் தலைவராக செயற்பட்ட மெஹிதி ஹாசன் மிராஷ், சௌமிய சர்கார், டஸ்கின் அஹ்மட் மற்றும் மெஹிதி ஹாஸன் போன்ற முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், இளம் வீரர்கள் பலருடன் பங்களாதேஷ் அணி களமிறங்கவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் இம்மாதம் 16, 18 மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் குழாம்
லிடன் டாஸ், சௌமிய சர்கார், டன்ஷிட் ஹாஸன், பிரவீன் ஹொஸைன் எமோன், அபிப் ஹொஸைன், மெஹிதி ஹாஸன் மிராஷ், ஜகர் அலி, ஷமிம் ஹொஸைன், மெஹிதி ஹாஸன், ரிஷாட் ஹொஸைன், நசும் அஹ்மட், டஸ்கின் அஹ்மட், டன்சிம் ஹஸன் சகீப், ஹஸன் மஹ்மூட், ரிபோன் மொண்டல்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<