சமநிலை அடைந்த இலங்கை – பங்களாதேஷ் இளையோர் அணிகளின் மோதல்

98
Sri Lanka U17 vs Bangladesh U17 2024

சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான மூன்று நாட்கள் கொண்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

>>ரெஹான் பீரிஸ் அபார சதம்; சிறந்த ஆரம்பத்துடன் பங்களாதேஷ் இளையோர் அணி<<

இலங்கை – பங்களாதேஷ் இளம் வீரர்கள் இடையிலான போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்தது. இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (07) நிறைவடையும் போது இலங்கையின் முதல் இன்னிங்ஸை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடி வந்த பங்களாதேஷ் அணியானது 62.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

இன்று (08) போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் இளம் வீரர்கள் 96 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களை எடுத்தனர். பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர்களில் ரகீபுல் ஹஸன் 46 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இலங்கைப் பந்துவீச்சு சார்பில் ரசித் நிம்சார 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, கித்ம விதானபதிரன 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சுருட்டினார். இதன் பின்னர் 24 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை வீரர்கள் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது 5 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்கள் பெற்றனர்.

>>அதிர்ச்சி தோல்வியுடன் 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை<<

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தில் கித்ம விதானபதிரன 32 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்திருந்தார். பங்களாதேஷ் பந்துவீச்சில் அலி ராபி 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை U17 (முதல் இன்னிங்ஸ்) – 304 (84.5) ரெஹான் பீரிஸ் 139, அப்துர் ரஹீம் 5/53

 

பங்களாதேஷ் U17 (முதல் இன்னிங்ஸ்) – 328 (96) அட்ரிட்டோ கோஷ் 87, ரிதோய் ஹஸன் 55, ரகீபுல் ஹொஸ்ஸன் 46, ரசித் நிம்சார 64/4, கித்ம விதாபதிரன 51/3

 

இலங்கை U17 (இரண்டாவது இன்னிங்ஸ்) –  110/5 (35.2) கித்ம விதானபதிரன 32, அலி ரபி 24/2

போட்டி சமநிலை அடைந்தது

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<