இலங்கையின் முன்னணி போசணை நிறுவனமான பிறீமா (Prima), கனிஷ்ட வயதுப்பிரிவினருக்கான (Junior) 2025ஆம் ஆண்டு Open Golf Championship தொடருக்கு அனுசரணை வழங்கி, இளம் கோல்ப் வீரர்களுக்கு வலுவூட்டும் தமது செயற்பாட்டினைத் தொடர்கின்றது.
>>இலங்கையை Formula 1 பந்தயத்தில் பிரதிநிதித்துவம் செய்வாரா யெவான் டேவிட்?
2025ஆம் ஆண்டுக்கான Open Golf Championship தொடர் டிசம்பர் 10 முதல் 12 வரை ரோயல் கோல்ப் கழகத்தில் (RCGC) நடைபெறுகின்றது. அத்துடன் தொடரின் பயிற்சிப் போட்டிகள் டிசம்பர் மாதம் 09ஆம் திகதி தொடக்கம் இடம்பெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
தொடரில் நான்கு வயதுப்பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறவிருப்பதோடு குறிப்பிட்ட வயதுப்பிரிவுகள் தங்கம் (15-18), வெள்ளி(13-14), வெண்கலம்(11-12) மற்றும் செப்பு(10 வயதின்கீழ்) என வகைப்படுத்தப்படுத்தப்பட்டு சிறுவர், சிறுமியர் என பாலாருக்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த தொடரில் இலங்கை உட்பட வெளிநாட்டினைச் சேர்ந்த சிறுவர், சிறுவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடர் குறித்து பிறீமா குழும நிறுவனத்தின் (Prima Group) பொது முகாமையாளர் Andy Wirawan இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
”இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ப் சம்பியன்ஷிப் ஆனது, இலங்கையின் தேசிய தரவரிசைக்கான அளவுகோலாகும். Prima Group Sri Lanka நிறுவனம் Sri Lanka Golf உடன் பங்காளியாக இருப்பது பெரும் பாக்கியமாகும். ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஆர்வமுள்ள இளம் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது கௌரவம் என்றார்.”
2024 இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ப் சம்பியன்ஷிப் தொடரானது, வளர்ந்து வரும் திறமையாளர்கள், சர்வதேச தோழமைக்கான வாய்ப்புக்கள் மற்றும் விளையாட்டில் பீறிமாவின் நீடித்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கிய கொண்டாட்டமாக அமையவுள்ளது.