தென்னாபிரிக்கா கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற டயலொக் TV

Cricket South Africa

136
Cricket South Africa

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டின் சர்வதேச போட்டிகளை இலங்கையில் ஒளிபரப்பு செய்யும் ஊடக உரிமத்தை டயலொக் தொலைக்காட்சி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தென்னாபிரிக்கா ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் சர்வதேச போட்டிகளை இலங்கையில் டயலொக் தொலைக்காட்சி ஒளிப்பரப்பவுள்ளது. 

>>த்ரில் வெற்றியோடு அரையிறுதிக்கு முன்னேறும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி<<

இந்த ஒளிபரப்பு உரிமத்தில் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர், அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடர் மற்றும் இங்கிலாந்து மகளிர் தென்னாபிரிக்கா மகளிர் அணி அணிகள் விளையாடும் தொடர் என்பவையும் உள்ளடங்கும். 

டயலொக் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள உரிமம் தொடர்பில் கருத்து வெளியிட்ட தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொலெட்சி மொசிகி, நாம் டயலொக் தொலைக்காட்சியுடன் இணைந்து, தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டை இலங்கை ரசிகர்கள் மத்தியில் கொண்டு வருவதற்கு மகிழ்ச்சியடைகிறோம் 

நாம் பல்வேறு ஊடக பங்காளர்களுடன் கைகோர்ப்பதற்கான காரணம் தென்னாபிரிக்க கிரிக்கெட்டை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்கும், அதிகமான பார்வையாளர்களை ஈரப்பதற்காகவும் ஆகும்” என்றார். 

அதேநேரம் டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் உயர் செயற்பாட்டு அதிகாரி லிம் லி சன் கருத்து தெரிவிக்கையில்,நாங்கள் தென்னாபிரிக்கா கிரிக்கெட்டுடன் இணைந்து, அவர்களின் சர்வதேச போட்டிகளை சிறப்பாக இலங்கை பார்வையாளர்களுக்காக டயலொக் தொலைக்காட்சியில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். 

>>ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு பின்னடைவு<<

இலங்கையில் விளையாட்டு பொழுதுபோக்கை மெழுகேற்றம் செய்யும் எங்களின் அர்ப்பணிப்பை இந்த விடயம் வெளிப்படுத்துகிறதுபார்வையாளர்களை உற்சாகப்படுத்தி ஒன்றிணைக்கும் ஒப்பற்ற அனுபவத்தை வழங்கவும், உலகத் தரமான விளையாட்டு நிகழ்ச்சிகளை இல்லங்களுக்கு கொண்டு வருவதன் மூலம், உலக விளையாட்டுகளுடன் எம்முடைய வாடிக்கையாளர்கள் தொடர்புப்படுத்தவும் நாம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றோம்” என்றார். 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (05) ஆரம்பமாகவுள்ளதுடன், இந்தப் போட்டியை டயலொக் தொலைக்காட்சியின் ThePapare TV (அலைவரிசை. இல.63), ThePapare TV HD (அலைவரிசை இல.126), ViU செயலி மற்றும் எம்முடைய இணையத்தளமான ThePapare.com போன்றவற்றில் நேரலையாக பார்வையிட முடியும். 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<