தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததற்கான பொறுப்பை துடுப்பாட்ட வீரர்கள் ஏற்றுக் கொள்வதாகவும், அதிலிருந்து பாடம் 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியது 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 233 ஓட்டங்களால் இலங்கை அணி படு தோல்வியடைந்தது. இந்த நிலையில், குறித்த போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சந்திமால், இலங்கை அணியின் தோல்வி குறித்து கருத்து வெளியிட்டார். அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் மிகவும் வருந்தினோம். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். ஆனால் நான் முன்பு கூறியது போல இது போன்ற சம்பவங்கள் நடக்கலாம். எனவே நாம் செய்ய வேண்டியது என்ன நடந்தது என்பதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த போட்டியில் நன்றாக விளையாட வேண்டும். நாம் அனைவரும் தவறு செய்கிறோம். ஆனால், அந்தத் தவறுகளை விரைவில் திருத்திக் கொள்ள வேண்டும். எங்கள் அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே, அடுத்த போட்டியில் அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை பதிவுசெய்த இலங்கை
- முதல் டெஸ்டில் வியான் மல்டரினை இழக்கும் தென்னாபிரிக்க அணி
- சந்திமால், தனன்ஜயவின் போராட்டத்தின் பின் இலங்கைக்கு தோல்வி
இலங்கைக்கு வெளியில் விளையாடும் போது அணி பலவீனமாக இருப்பதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சந்திமால், அவ்வாறு கூற முடியாது. இறுதியாக நாங்கள் இங்கிலாந்து மண்ணில் ஆடினோம். அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வ்pயைத் தழுவினாலும், எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் மூன்றாவது போட்டியில் எங்களால் வெற்றி பெற முடிந்தது. துரதிஷ்டவசமாக தென்னாப்பிரிக்காவில் எங்களுக்கு பயிற்சி ஆட்டங்கள் இல்லை. நாங்கள் அனைவரும் விளையாடிய முதல் இன்னிங்ஸ் இந்த மைதானத்தின் மத்தியில் உள்ள ஆடுகளமாக இருந்தது. ஒருவேளை, இவ்வளவு குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் இதுபோன்ற விடயங்கள் நடக்கலாம்.
ஒரு அணியாக, நாங்கள் நல்ல மனநிலையில் இருக்கிறோம். பயிற்சியாளரும், நிர்வாகமும் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கையை தருகிறார்கள். முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாலும், அவர்கள் எங்களைப் பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார்கள். அதேபோல, நாங்கள் 4ஆவது இன்னிங்ஸில் 300 ஓட்டங்களைக் குவித்தது என்பது மற்றொரு சாதகமான விடயம். தென்னாப்பிரிக்காவில் இதைச் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. அதில் இருந்து பெற்றுக்கொண்ட நல்ல விடயங்களுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட காத்திருக்கிறோம் என்று கூறினார்.
இதனிடையே, தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பில் ஊடகவியலளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சந்திமால் பதிலளிக்கையில், தென்னாப்பிரிக்காவில் இலங்கை அணி முதல்தடவையாக அலந்நி கொண்ட 2011 டேர்பன் டெஸ்ட் எனது அறிமுக டெஸ்ட் போட்டியாக அமைந்தது. அந்த வெற்றி எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததுடன், என்றென்றும் எனது நினைவில் இருக்கும். இம்முறை அடைந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தைம் தருகின்ற போதிலும், நான் வழங்கிய பங்களிப்பு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். தென்னாப்பிரிக்காவுக்கான எனது கடைசி கிரிக்கெட் சுற்றுப்பயணமாக இந்த தொடர் இருக்கக்கூடும். எவ்வாறாயினும், இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு நாங்கள் அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் சந்திக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<