பங்களாதேஷூடன் ஆதிக்கம் காட்டிய இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

1

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது மூன்று நாள் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை இளம் வீரர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் ஆதிக்கம் காட்டி வலுப்பெற்றிருக்கின்றனர்.

>>பயிற்சியாளராக மாற தேர்வாளர் பதவியினை துறந்த டில்ருவான் பெரேரா

காலியில் நடைபெறும் இந்த போட்டி நேற்று (01) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் இலங்கையை துடுப்பாடப் பணித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இளம் வீரர்கள் கொண்ட இலங்கை அணியானது 82 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டத்தினை நிறுத்தியது.

இலங்கை சார்பில் விக்கெட்காப்பு வீரரான ஜேசன் பெர்னாண்டோ 98 ஓட்டங்கள் பெற்று சதத்தினை 02 ஓட்டங்களால் தவறவிட, ஜோசுவா செபஸ்டியன் (53) மற்றும் கிம்ஹான ரசஞ்சன (51) ஆகியோர்  அரைச்சதங்களை விளாசினர். பங்களாதேஷ் பந்துவீச்சில் மாஹிர் இஷ்மாம் மற்றும் அஹ்சானுல் ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த பங்களாதேஷ் தரப்பு இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 77 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகின்றது.

பங்களாதேஷ் சார்பில் சதம் விளாசிய அட்ரிட்டோ கோஷ் 114 ஓட்டங்கள் பெற்றார்.   இலங்கை பந்துவீச்சில் ரசித் நிம்சார 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அபீத் பரணவிதான 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருக்கின்றார்.

போட்டியின் சுருக்கம்

 

இலங்கை U17 (முதல் இன்னிங்ஸ்) – 285/8 (82) ஜேசன் பெர்னாண்டோ 98, ஜோசுவா செபஸ்டியன் 53, அஹ்சானுல் ஹக் 32/2

 

பங்களாதேஷ் U17 (முதல் இன்னிங்ஸ்) – அட்ரிட்டோ கோஷ் 114, ரசித் நிம்சார 36/4

 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<