பயிற்சியாளராக மாற தேர்வாளர் பதவியினை துறந்த டில்ருவான் பெரேரா

4
Dilruwan Perera

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்ட டில்ருவான் பெரேரா கிரிக்கெட் பயிற்சியாளராக கவனம் செலுத்த தனது பதவியினை திறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

>>முன்னணி வேகப்பந்துவீச்சாளரை இழக்கும் தென்னாபிரிக்கா!<<

அந்தவகையில் தேர்வாளர் குழாத்தில் இருந்து பதவி விலகிய டில்ருவான் பெரேரா தற்போது இலங்கை 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.  

42 வயது நிரம்பிய டில்ருவான் பெரேரா இலங்கை அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, 13 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளிலும் பங்கேற்றிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.  

இதேநேரம் டில்ருவான் பெரேராவின் பதவி விலகலினை அடுத்து இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வுக்குழாம் உபுல் தரங்க, இன்டிக்க டி சராம், அஜந்த மெண்டிஸ் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோருடன் காணப்படுகின்றது.  

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<