தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஷியா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெரால்ட் கோட்ஷியா நான்காவது நாள் ஆட்டத்தின் போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார்.
>>Coetzee ruled out from second Test against Sri Lanka<<
இவருடைய தொடைப்பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அடுத்துவரும் ஐந்து வாரங்களுக்கு விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இலங்கை தொடர் மாத்திரமின்றி அடுத்துவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் இவர் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்படடுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
கோட்ஷியா இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணிக்காக சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமாலின் விக்கெட்டினையும் கைப்பற்றி அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல முக்கியமான காரணமாக இருந்தார்.
ஜெரால்ட் கோட்ஷியா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் கிவெனா மபாக்கா அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<