மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிருக்கான 19 வயதின் கீழ் ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணியின் தலைவியாக மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மனுதி நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக மாத்தறை அனுர கல்லூரியைச் சேர்ந்த ரஷ்மிகா செவ்வந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
>> முதல் டெஸ்டில் வியான் மல்டரினை இழக்கும் தென்னாபிரிக்க அணி
இவர்களுடன் உள்ளூர் தொடர்களில் பிரகாசித்துவந்த பல வீராங்கனைகளும் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
மகளிர் 19 வயதின் கீழ்ஆசியக்கிண்ணத்தின் முதல் போட்டியில் மலேசியா அணியையும், இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியையும் இலங்கை அணி டிசம்பர் 15 மற்றும் 16ம் திகதிகளில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் குழாம்
மனுதி நாணயக்கார (தலைவி), ரஷ்மிகா செவ்வந்தி, விமோசிகா பாலசூரிய, ஹிருனி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, தஹமி சனுத்மா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி கிம்ஹானி, அஷேனி தலகுனே, பிரெமுதி மெத்சரா, சமோதி பிரபோதா, சஞ்சனா காவிந்தி, தனுலி தென்னகோன், லிமன்சா திலகரட்ன, செஹேரா இந்துவரி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<